ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

11.7.1976: 6 பிள்ளைகளின் தாய்க்கு சிறுநீரகம் அளித்து காப்பாற்றிய சென்னை இளைஞர்

6 பிள்ளைகளின் தாய்க்கு சிறுநீரகம் அளித்து காப்பாற்றிய சென்னை இளைஞர் பற்றி...

half century ago

11.7.1976 - Dinamani

Published On :11 ஜூலை 2026, 4:04 am IST

சண்டிகார், ஜூலை 10 - சென்னை நகரில் பி.காம் படித்து வேலை தேடி அலையும் பி.ஆர். இந்தரின் பார்வையில் பட்டது பம்பாய் வாராந்திர சஞ்சிகை ஒன்றில் வெளியான வேண்டுகோள்.

6 குழந்தைகளுக்கு தாயான திருமதி சந்தோஷ் குப்தாவின் 2 சிறுநீரகங்களும் செயல்படாது சண்டீகர் ஆஸ்பத்திரியில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். 'பி' பிளஸ் ரத்த பிரிவைச் சேர்ந்தவர் நன்கொடையாக ஒரு சிறுநீரகம் அளித்தால் இந்தத் தாய் பிழைப்பார் என்று அவரின் கணவர் இந்த வேண்டுகோள் விடுத்திருந்தார்.

உறுதியான முடிவு

இதைப் படித்த இந்தர் தனது சிறுநீரகம் ஒன்றை இந்த தாய்க்கு நன்கொடையாக அளிக்க முடிவு செய்தார். ஆனால் கையிலே பணம் இல்லை ரயில் கட்டடணத்திற்குக் கூட. உனக்கு 25 வயது தான் ஆகிறது நன்கு யோசனை செய்து கொள் என்று நண்பர்களும் உறவினர்களும் அதைரியப்படுத்தியும் தன்னிடமிருந்த சேமிப்புகளை எல்லாம் ஒன்று திரட்டினார் இந்தர். சண்டீகாருக்கு கிளம்ப இருக்கும் முதல் ரயில் எது என்று விசாரித்து புறப்பட்டுவிட்டார்.

ரூ 20,000க்கு ஆசைப்படவில்லை

ஆஸ்பத்திரியில் வார்டு வார்டாகச் சென்று நோயாளி திருமதி சந்தோஷ் குப்தாவை இந்தர் தேடிக் கொண்டிருக்கையில், ரூ. 20,000 கரன்ஸி நோட்டுக்களுடன் ஒரு சிறு நீரகம் கொடுத்து உதவுகிறீர்களாக என் உறவினரைக் காப்பாற்ற என்று மற்றொரு நேயாளியின் உறவினர்கள் கேட்டதற்கு மன்னிக்கவும், எனது சிறுநீரகம் வியாபாரத்திற்கல்ல; 6 குழந்தைகளுக்குத் தாயான திருமதி குப்தாவை காப்பாற்றுவதற்குத் தான் என்று கூறிவிட்டார்.

இளைஞரின் மகிழ்ச்சி

டாக்டர்கள் கே. எஸ். சக், ஆர்.வி.எஸ். யாதவ், சகாரியா ஆகியோர் கடந்த வியாழனன்று இந்தரின் சிறு நீரகம் ஒன்றை அகற்று திருமதி சந்தோஷ் குப்தாவுக்கு பொறுத்திவிட்டார்கள்.

சிறுநீரகத்தை அளித்து ஆஸ்பத்திரியில் சுகமடைந்து வரும் இந்தர் தனது பயணம் வெற்றிகரமாக முடிந்தது குறித்து மகிழ்ச்சிக் கொண்டுள்ளார், தனது சொந்த ஊர் சென்னைக்கு திரும்ப பணமில்லையே என்று கூட கவலைப் படாமல்!

30 மணி நேரத்தில் சென்னையிலிருந்து டில்லி போகும் த. நா. எக்ஸ்பிரஸ் - ஆகஸ்ட் 7 முதல் விடப்படும்

புதுடில்லி, ஜூலை. 9 - ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதியிலிருந்து சென்னைக்கும் டில்லிக்கும் இடை யே ஒரு புது அதிவேக எக்ஸ்பிரஸ் விடப்படும். "தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்" என்று பெயர் சூட்டப்பட இருக்கும் இந்த எக்ஸ்பிரஸ் சென்னையிலிருந்து முப்பதே மணி நேரத்தில் டில்லிக்கு போய்ச் சேர்ந்துவிடும்.

சென்னைக்கும் டில்லிக்கும் இடையே உள்ள தூரம் 2182 கிலோ மீட்டர் (1364 மைல்)

தற்போது சென்னையிலிருந்து டில்லிக்கு மிக அதிக வேகமாகச் செல்லக் கூடிய எக்ஸ்பிரஸ் 40 மணி நேரத்தில் செல்லுகிறது. ஆகவே தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் பயணத்தின் நேரத்தை 10 மணி நேரம் குறைக்கிறது. அதுமட்டுமல்லாது, இப்பயணத்தில் ஒரே இரவைத் தான் பயணிகள் கழிக்க வேண்டியிருக்கும்.

மணிக்கு 100 கிலோ மீட்டர் (62.1 மைல்) வேகத்தில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் விரையும்.

டில்லியிலிருந்து சென்னையிலிருந்தும் வாரத்துக்கு 3 நாள் இந்த எக்ஸ்பிரஸ் செல்லும். ...

Summary

11.7.1976: Chennai youth saves mother of six by donating a kidney.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.