ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

10.7.1976: அரசு தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்க தேர்வு?

அரசு தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்க தேர்வு நடத்த திட்டம்...

half century ago

10.7.1976 - Dinamani

Published On :10 ஜூலை 2026, 4:09 am IST

சென்னை, ஜூலை. 9 - மாநிலம் பூராவிலுள்ள அரசாங்க அலுவலங்களில் நீண்ட நாட்களாக தற்காலிகமாகப் பணியாற்றி, வரும் அமைச்சகப் பணியாளர்களை நிரந்தரப்படுத்துவதற்காக பொது தேர்வு ஒன்றை நடத்துவது குறித்து தமிழக அரசு யோசித்து வருவதாக விஷயமறிந்த வட்டாரங்களிலிருந்து நம்பகமாக அறியப்படுகிறது.

ஐந்தாண்டுகளும் அதற்குக் குறைந்த ஆண்டுகளும் தொடர்ந்து தற்காலிகமாகப் பணியாற்றி வரும் அரசு அலுவலாளர்கள் ஏறத்தாழ மூவாயிரத்திற்குச் சற்று அதிகமானவர்கள் இன்னும் நிரந்தரமாக்கப்படாமல் இருக்கிறார்கள். அரசு அலுவலாளர்கள் தற்காலிகமாக பணியில் அமர்த்தப்படுவது இயற்கை. ஆனால் அந்தப் பணிக்கு நிரந்தர அலுவலாளர்களாக மாநில சர்வீஸ் கமிஷன் தேர்வில் வெற்றிபெற்றவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பது விதிமுறை கடந்த காலத்தில் என்ன காரணத்தினாலேயோ இவர்கள் நியமிக்கப்படாமல் தற்காலிகப் பணியாளர்கள் நீடிக்கப்பட்டனர்.

மாநில சர்வீஸ் கமிஷனால் தேர்வு செய்யப்பட்டவர்கள் பணி இல்லாமல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதும் சர்வீஸ் கமிஷன் இது குறித்து அரசுக்குத் தெரிவித்தது. இதன் தொடர்பாக ஐந்தாண்டு, ஏழாண்டு என்று தொடர்ந்து பணியாற்றிய அரசு அலுவலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டது. உடனே அவர்கள் இது பற்றி அரசிடம் முறையிட்றுக் கொண்டனர்.

"ஐந்தாண்டுக் காலம் தொடர்ச்சியாகப் பணியாற்றி வரும் தற்காலிக அரசு அலுவலாளர்களை நிரந்தரமாக்கி முறைப்படுத்துவது குறித்து அரசு யோசிக்கும் என்று முந்தைய கவர்னர் ஷாவும், தற்போதைய தலைமைச் செயலர் வி. கார்த்த்கேயனும் உறுதி கூறி இருந்தார்கள்.

அந்த உறுதி மொழி அடிப்படையில் அரசு அலுவலகங்களில் ஐந்தாண்டுக் காலம் தற்காலிகமாகப் பணியாற்றுகிறவர்களை நிரந்தரமாக்க ஒரு திட்டம் குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. மாநிலம் பூராவும் அரசு அலுவலகங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் தற்காலிகமாக அமைச்சகப் பணியாளர்களாக மூவாயிரத்துக்குச் சற்றுக் கூடுதலான எண்ணிக்கை உள்ளவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களை நிரந்தப்படுத்து முன் ஒருபொதுத் தேர்வு நடத்துவது எனவும், அந்தத் தேர்வில் வெற்றிபெற்றவர்களையே நிரந்தரப் பணியாளர்களாக உறுதிப்படுத்துவது எனவும் அரசு கருதுவதாக அறியப்படுகிறது. இந்த பொதுத் தேர்வை நடத்தும் பொறுப்பை மாநில சர்வீஸ் கமிஷன் ஏற்கும். இதற்குப் பிறகு ஒவ்வொரு துறையிலும் இனி தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டால் அவர்கள் ஓராண்டு காலத்திற்கு மேல் நீடிக்கப்படாமலும் சர்வீஸ் கமிஷன் தேர்வு பெற்றவர்களே நிரந்தரப் பணியாளர்களாக நியமிக்கப்பட அந்தந்த துறைத் தலைவர்களை பொறுப்பாக்கி அரசு உத்திரவிடும் எனவும் தெரிகிறது.

மதுவிலக்கு அமல் பற்றி பரிசீலிக்க உயர் அதிகார குழு

சென்னை, ஜூலை 9 - மதுவிலக்கை அமல் நடத்துவதற்காக தற்போதுள்ள ஏற்பாடுகளைப் பரிசீலிக்கவும், மதுவிலக்கை இன்னும் கண்டிப்பாக அமல் நடத்துவதற்கான வழிமுறைகள் பற்றி யோசனை கூறவும உயர் அதிகாரக் கமிட்டி ஒன்றை அமைக்க தமிழ்நாடு சர்க்கார் முடிவு செய்திருப்பதாக, கவர்னர் மோகன்லால் சுகாதியா இன்று அறிவித்தார்

இந்தக் குழு ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவர் தலைமையில் அமைக்கப்படக்கூடும். ஒரு சில தினங்களுள் அது செயல்படத் தொடங்கிவிடும். ...

Summary

10.7.1976: Selection to make temporary government employees permanent?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.