ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

18.7.1976: தற்காலிக உத்தியோகங்களை நிரந்தரமாக்கும் விஷயம்: தமிழக அரசு புது உத்தரவு

அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

half century ago

18.7.1976 - Dinamani

Published On :18 ஜூலை 2026, 4:13 am IST

திருச்சி, ஜூலை. 16 - தற்காலிக உத்தியோகங்களுக்கு அவசியமான சர்வீஸ் விதிகளை வகுக்காமல் அவற்றை நிரந்தரமாக வைத்துக் கொள்வது ஒழுங்கற்றது என்று இலாகாக்களின் தலைமை அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு கூறியிருக்கிறது.

சர்வீஸ் விதிகள் வகுக்கப்பட்டுள்ள தற்காலிக உத்தியோகங்களை மட்டும் நிரந்தரமாக வைத்துக் கொள்ள பிரேரணைகளை அரசாங்கத்திற்கு இலாகாக்களின் தலைமை அதிகாரிகள் - அனுப்ப வேண்டும். பிரேரணைகளை அனுப்புகின்றபோது பிரேரணைகளில் இடம்பெறும் தற்காலிக உத்தியோகங்கள் அனைத்துக்கும் சர்வீஸ் விதிகள் உள்ளனவா என்பதை இலாகாக்களின் தலைமை அதிகாரிகள் தெரிவிக்கவேண்டும்.

ஒரு தற்காலிக உத்தியோகம் மூன்று ஆண்டுகளுக்கு தொடர்ந்து இருந்து வந்திருந்தால், குறிப்பிட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதாக அந்த உத்தியோகம் இருக்கும் பட்சத்தில், அதை நிரந்தரமாக்கலாம் என்று 4-11-1963 ஆம் தேதியன்று தமிழ்நாடு அரசு ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளது.

சர்வீஸ் விதிகள் இல்லாதிருந்தும், மூன்று ஆண்டுகள் தொடர்ந்து இருந்த தற்காலிக உத்தியோகங்கள் நிரந்தரமாக்கப்பட்டுவிட்ட உதாரணங்கள் அரசின் கவனத்திற்கு வந்துள்ளன. எனவே தற்காலிக உத்தியோகங்களுக்கு அவசியமான சர்வீஸ் விதிகளை வகுக்காமல் அவற்றை நிரந்தர உத்தியோகங்களாக ஆக்குவது ஒழுங்கற்றது என்று இலாகாக்களின் தலைமை அதிகாரிகளுக்குக் கூறப்பட்டிருக்கிறது.

பணியில் இருக்கும் தொழிலாளர் குடும்பம் புது உதவி பெறும்

புது டில்லி, ஜூலை. 17- ஊழியர்கள் பிராவிடண்ட் நிதி, நிலக்கரிச் சுரங்கங்கள் பிராவிடண்ட் நிதி ஆகிய திட்டங்களின் கீழ் உள்ள தொழிலாளர்களில் எவரேனும் பணியில் இருக்கும் காலத்தில் இறந்து விட்டால், அவருடைய குடும்பத்தாருக்கு அதிகபட்சம் ரூ. 10 000 வரையில் கூடுதலாக ஒரு தொகை வழங்க வகை செய்யும் ஒரு அவசரச் சட்டத்தை ராஷ்டிரபதி இன்று பிரகடனம் செய்தார்.

1976-ம் வருடத்திய தொழிலாளர் பிராவிடண்ட் நிதிச் சட்டங்கள் திருத்த அவசரச் சட்டம் என்று இந்த சட்டத்திற்குப் பெயர்.

தொழிலாளர்களுக்கென, டிபாசிட்டுடன் தொடர்புபடுத்தப்பட்ட இன்ஷுரன்ஸ் திட்டத்தை அரசாங்கம் இன்று அறிவித்தது. அந்தத் திட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் புதிய பயனை அடைவார்கள்.

84 லட்சம் பேர் பயனடைவர்

ஊழியர்கள் பிராவிடண்ட் நிதித் திட்டத்தின் கீழுள்ள 78 லட்சம் தொழிலாளர்களும், நிலக்கரிச் சுரங்கங்கள் பிராவிரண்ட் நிதித் திட்டத்தின் கீழுள்ள 6.2 லட்சம் தொழிலாளர்களும், ஆக மொத்தம் 84.02 லட்சம் தொழிலாளர்கள் இந்தப் புதிய திட்டத்தினால் பலன் அடை வார்கள். ...

Summary

18.7.1976: Matter of regularizing temporary posts: New order by the Tamil Nadu Government.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.