ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

3.8.1976: த.நா.க்கு கிருஷ்ணராஜசாகர் நீர் - 500 கோடி கன அடி தண்ணீர் வருகிறது

அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

half century ago

3.8.1976 - Dinamani

Published On :3 ஆகஸ்ட் 2026, 5:13 am IST

பெங்களூர், ஆக. 2 : தமிழ் நாட்டின் குறுவைப் பயிரைக் காக்க கிருஷ்ணராஜசாகரிலிருந்து 500 கோடி கன அடி தண்ணீரை கர்நாடக சர்க்கார் திறந்து விட்டது.

இத்தகவலை கர்நாடக அரசுப் பேச்சாளர் தெரிவித்தார்.

தன்னுடைய பயிர்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான தண்ணீரை விடுவதற்கு சங்கடப்பட்டுக் கொண்டிருக்கும் கர்நாடகம், நல்லெண்ண அறிகுறியாக தண்ணீர் விடுவதென முடிவு செய்ததென்று அரசுப் பேச்சாளர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

கிருஷ்ணராஜசாகர் பகுதியில் கரும்புக்கு முக்கியமாக தண்ணீர் தேவைப்படுவதாக அவர் சொன்னார்.

கிருஷ்ணராஜசாகரிலிருந்து இன்று காலையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இது மேட்டூர் நீர்த்தேக்கத்துக்கு 3 நாளில் போய்ச் சேருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிருஷ்ணராஜ சாகரில் இன்றைய நீர் மட்டம் 103.06 அடி நீர்த் தேக்கத்துக்கு 35,219 கியூஸெக் தண்ணீர் வருகிறது. 13,953 கியூஸெக் விடப்படுகிறது.

சர்க்காரியா கமிஷன் விசாரணை ஆரம்பம் - நடைமுறைகள் பற்றி இரு தரப்பு வாதம்

புதுமல்லி, ஆக. 2 - சர்க்காரியா கமிஷனின் சாட்சி விசாரணை சம்பந்தமான நடைமுறைகள் பற்றிய சில விஷயங்களை முடிவு செய்வதற்காக கமிஷன் விசாரணை இன்று ஆரம்பமாகியது.

முன்னாள் முதன் மந்திரி கருணாநிதி மற்றும் அவரது மந்திரி சபையைச் சேர்ந்த சில மந்திரிகள் மீது அ.தி.மு.க. தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரனும், தமிழ் நாடு வலது கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர் எம். கல்யாணசுந்தரமும் கூறியுள்ள ஊழல், நிர்வாக அதிகார துஷ்பிரயோக புகார்கள் பற்றி விசாரிப்பதற்காக, ஆர்.எஸ். சர்க்காரியாவைக் கொண்ட ஒரு நபர் கமிஷனை, விசாரணை கமிஷன் சட்டத்தின் கீழ் இந்திய சர்க்கார் பிப்ரவரி 3-ந்தேதியன்று நியமித்திருப்பது தெரிந்ததே.

கமிஷன் பிறப்பித்த நோட்டீஸ்களையடுத்து இந்தப் புகார்களால் பாதிக்கப்படக் கூடிய நபர்களால் 28 பிரமாண வாக்குமூலங்கள் தாக்கல் செய்யப்பட்டன. எதிர் பிரமாண மனுதாரர்களால் 34 வாக்குமூலங்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. பொது மக்களிடேயிருந்து 162 வாக்கு மூலங்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த 162 வாக்குமூலங்களில் 6 வாக்குமூலங்கள் சத்தியப் பிரமாணமின்றி தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. ...

Summary

3.8.1976: Krishnarajasagar water for Tamil Nadu – 500 crore cubic feet of water is arriving

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.