ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

9.7.1976: ரயில்வே பிளாட்பாரத்தை பாங்கில் அடமானம் வைத்து பணம் வாங்கியவர்

ரயில்வே பிளாட்பாரத்தை பாங்கில் அடமானம் வைத்து பணம் வாங்கியவர் பற்றி...

half century ago

9.7.1976 - Dinamani

Published On :9 ஜூலை 2026, 5:12 am IST

பாட்னா, ஜூலை. 8 - பாட்னாவில் உள்ள விசாலமான காந்தி மைதானத்தையும், பாட்னா சந்திப்பு ரயில் நிலையத்தின் முதலாவது பிளாட்பாரத்தையும் மும்மடங்கு கடன் வாங்குவதற்காக, கிருஷ்ணகோபால் சிங் என்ற நபர் பாட்னா அர்பன் கூட்டுறவு பாங்கிடம் அடமானம் வைத்த அதிசயமான தகவல் நேற்று தெரிய வந்தது.

பீஹார் அசெம்பிளியில் கூட்டுறவு இலாகா மான்யக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு கூட்டுறவு மந்திரி முகம்மது ஹுசேன் ஆஜாத் பதிலளிக்கையில், காந்தி மைதானத்தின் விலை ரூ. 5 லட்சமாகவும், ரயில்வே பிளாட்பாரத்தின் விலை ரூ. 7.5 லட்சமாகவும் காட்டப்பட்டிருந்ததாகத் தெரிவித்தார்.

இவ்விவகாரம் முழுவதையும் குறித்து புலன் விசாரிக்கப்படுவதாகவும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என்றும் மந்திரி கூறினார்.

அரசியலமைப்புக்கு விரிவான திருத்த மசோதா - பார்லிமெண்டின் அடுத்த கூட்டத் தொடரில் வரும்

புது டில்லி, ஜூலை. 8 - விரிவான அரசியலமைப்பு திருத்த மசோதா வொன்றை பார்லிமெண்டின் மாரிக் காலக் கூட்டத் தொடரில் கொண்டுவர மத்திய சட்ட மந்திரி எச். ஆர். கோகலே உத்தேசித்திருக்கிறார். சுவாண் சிங் தலைமையில் காங்கிரஸ் கட்சியால் அமைக்கபட்ட கமிட்டி சிபாரிசு செய்துள்ள பல்வேறு மாறுதல்கள், இத் திருத்த மசோதாவில் சேர்க்கப்படும்.

பிரஜைகளின் அடிப்படைக் கடமைகள் சம்பந்தமாக கடைசியாக சுவரண் சிங் கமிட்டி தெரிவித்த பிரேரணைகளும்கூட, மாநிலங்களிலிருந்து வரும் கருத்துக்களையும் மந்திரிசபை செய்யும் இறுதி முடிவையும் கருத்தில் கொண்டு மசோதாவில் சேர்க்கப்படும் என்று சட்ட மந்திரியுடன் நெருங்கியத் தொடர்பு உள்ள வட்டாரங்கள் கூறின.

அரசியலமைப்பைத் திருத்தத்திற்கான நகல் மசோதாவை இந்த மாதம் மந்திரி சபையிடம் சமர்ப்பிக்க சட்ட மந்திரி உத்தேசித்துள்ளார்.

சுவரண் சிங் கமிட்டியின் சிபாரிசுகளில் வராத, மற்றும் சில அரசியலமைப்பு ஷரத்துக்களிலும் மாறுதல்களைச் செய்ய இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள சட்ட அமைச்சர் விரும்புவதாகத் தெரிகிறது. உதாரணமாக ஹைகோர்ட்டுகள் மீது சுப்ரீம் கோர்ட்டின் அதிகார வரம்பு சம்பந்தமாக உள்ள சந்தேகங்களை அகற்ற அவர் விரும்புகிறார். ...

Summary

9.7.1976: The person who obtained a loan by mortgaging a railway platform at a bank.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.