ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சுதந்திர தினம்: 15 காவல் அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கம்! தமிழக அரசு அறிவிப்பு!

15 காவல் துறை அதிகாரிகள், சார்நிலை அலுவலர்களுக்கு சிறப்புப் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது பற்றி....

CM vijay

தமிழ்நாடு இல்லத்தில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் முதல்வர் விஜய்... - DIPR (கோப்புப்படம்)

Published On :14 ஆகஸ்ட் 2026, 12:49 pm IST

2026 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி 15 காவல் துறை அதிகாரிகள், சார்நிலை அலுவலர்களுக்கு தமிழக அரசு சிறப்புப் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புலன் விசாரணைப் பணியில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் கீழ்கண்ட 10 காவல்துறை அதிகாரிகள் / சார்நிலை அலுவலர்களுக்கு 2026-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப் பணிப் பதக்கங்கள் வழங்க தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்கள்:-

1. திருமதி சி. ஜெயஸ்ரீ, காவல் துணை கண்காணிப்பாளர், கும்மிடிபூண்டி உட்கோட்டம், திருவள்ளுர் மாவட்டம்.

2. திருமதி நா. தமிழரசி, காவல் துணை கண்காணிப்பாளர், திருவள்ளுர் உட்கோட்டம், திருவள்ளுர் மாவட்டம்.

3. திரு கொ. அழகுராஜ், காவல் ஆய்வாளர், சைபர் கிரைம் காவல் நிலையம், கோவை மாநகரம்.

4. திருமதி ந. தனுசியா, காவல் துணை கண்காணிப்பாளர், ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு, குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை, திருச்சி மாநகரம்.

5. திருமதி சே.லதா, காவல் ஆய்வாளர், தனி சிறுவர் காவல் உதவி பிரிவு, கோவை மாநகரம்.

6. திருமதி வி. கோமதி, காவல்துறை உதவி தலைவர், நிர்வாகம், காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம், சென்னை.

7. திருமதி மா.சித்ரா, காவல் ஆய்வாளர், கைகளத்தூர் காவல் நிலையம், பெரம்பலூர் மாவட்டம்.

8. திருமதி ரா.வினதா, காவல் ஆய்வாளர், மேல்மலையனூர் காவல் நிலையம், விழுப்புரம் மாவட்டம்.

9. திருமதி கோ.மகாலெட்சுமி, காவல் ஆய்வாளர், மாவட்ட குற்ற பதிவேட்டு கூடம், சிவகங்கை மாவட்டம்.

10. திரு ச.விஜயகுமார், காவல் துணை ஆணையர், மேற்கு, திருநெல்வேலி மாநகரம்.

சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள்

இதே போன்று பொதுமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கீழ்கண்ட
5 காவல் துறை அதிகாரிகள் / சார்நிலை அலுவலர்களுக்கு
2026-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு
அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் வழங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்:-

1. டாக்டர் வி. சசி மோகன், இ.கா.ப, காவல்துறை துணைத் தலைவர், திண்டுக்கல் சரகம்.

2. திருமதி தெ.சண்முக பிரியா, இ.கா.ப, காவல் கண்காணிப்பாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம், மேற்கு சரகம்,  சென்னை. 

3. திரு சி.எம்.ஆர். மணிமொழியன், துணை காவல் கண்காணிப்பாளர், தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை,  சென்னை.

4. திரு க.மதன் மோகன், காவல் ஆய்வாளர் (தொழில்நுட்பம்), மாநில காவல் தலைமை கட்டுப்பாட்டு அறை, சென்னை.

5. திரு மு.ரவிக்குமார், தலைமை காவலர்-1618, கரூர் நகர காவல் நிலையம், கரூர் மாவட்டம்.

விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் வெகுமதியும் வழங்கப்படும்.

மேற்கண்ட விருதுகள், தமிழ்நாடு முதல்வரால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும்.

Summary

Special medals announced for 15 police officers and subordinate personnel by tn govt

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.