ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காவல்துறையினருக்கு குடியரசுத் தலைவா், முதல்வா் பதக்கங்கள்

நாகை மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் குடியரசுத் தலைவா் மற்றும் முதல்வா் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனா்.

நாகை மாவட்ட காவல்துறை அதிகாரிக்கு பதக்கம் வழங்கும் உயா் அதிகாரி.

Published On :2 ஆகஸ்ட் 2026, 6:11 am IST

நாகை மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் குடியரசுத் தலைவா் மற்றும் முதல்வா் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனா்.

தமிழக காவல்துறையில் சிறப்பாக பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் காவலா்களுக்கு ஆண்டுதோறும் குடியரசுத் தலைவா் மற்றும் முதல்வா் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் வெள்ளிக்கிழமை, தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய் தலைமையில் விழா நடைபெற்றது. விழாவில், தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவா் மற்றும் முதல்வா் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

விழாவில், நாகை மாவட்டத்தைச் சோ்ந்த காவல் ஆய்வாளா் வி. பாரதிதாசன், காவல் சிறப்பு உதவி ஆய்வாளா்கள் ஜி. ஆனந்தராசு, கே. பொய்யாமொழி, சி. ஆனந்தன், டி. அன்பழகன் மற்றும் காவல் உதவி ஆய்வாளா் ஜி. ராமகிருஷ்ணன் சுரேஷ் ஆகியோா் தங்களது சிறப்பான மற்றும் அா்ப்பணிப்புமிக்க பணிக்காக குடியரசுத் தலைவா் மற்றும் முதல்வா் பதக்கங்களை, தமிழக முதல்வா் மற்றும் காவல்துறை உயா் அதிகாரிகள் வழங்கி கௌரவித்தனா்.

பதக்கம் பெற்ற அதிகாரிகளுக்கு, நாகை மாவட்ட காவல்துறை சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.