பின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

3.4.1976: காப்பியடித்து பட்டம் பெற்ற மாணவனின் கண்ணீர் கடிதம்!

காப்பியடித்து பட்டம் பெற்ற மாணவனின் கண்ணீர் கடிதம்...

Half century ago

3.4.1976 - DNS

Published On :3 ஏப்ரல் 2026, 4:10 am IST

ஆமதாபாத், ஏப், 1- பரீட்சையில் காப்பியடித்து தேர்ச்சி பெற்றது தனக்கு பலனளிக்கவில்லை என்று பி.காம் பட்டதாரி ஒருவர் குஜராத் பல்கலைக்கழக துணை வேந்தருக்கு தான் செய்த குற்றத்தை உணர்ந்து கடிதம் எழுதியுள்ளார்.

4 ஆண்டுகளும் காப்பியடித்தே நான் பி.காம் பரீட்சைகளில் தேர்ச்சி பெற்றேன். நான் ஒருபோதும் படித்தது கிடையாது. பரீட்சைக்கு செல்லும் போது, கையில் ஏற்கனவே எழுதிய விடைத்தாள்களை எடுத்துச் சென்றேன். இப்போது எனக்கு வேலையும் கிடைக்கவில்லை. வேலைக்கு ஆட்களை எடுப்பவர்கள் நடத்தும் போட்டிகளில் படித்துப் பட்டம் பெறாத நான் தோல்வியை யடைந்து வருகையில் எனக்கு எப்படி வேலை கிடைக்கும்? எனக்கு ஏதாவது தெரிந்தால்தானே" என்று குஜாரத் துணை வேந்தர் ஈஸ்வர்பாய் படேலுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

மாணவர் யாரும் காப்பியடிக்க முடியாமல் கடும் நடவடிக்கைகள் எடுக்கும்படியும் துணை வேந்தரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

கோவை சிறையில் மரண தண்டனை நிறைவேறியது

கோவை, ஏப், 1 - கோவை மத்திய சிறையில் சுடந்த 18ந் தேதி கந்தசாமி என்ற பொன்னுசாமிக்கு மரண தண்டனை நிறைவேறியது.

1972 செப்டம்பர் 15ந் தேதி இரளில் ஒட்டப்பாளையம் கிராமத்தில் ராமசாமி கவுண்டர், அவரது மனைவி இளையம்மாள், பேரன் ஆகியோரை கொலை செய்ததாக எதிரி பொன்னுசாமிக்கு ஈரோடு செஷன்ஸ் நீதிபதி மரண தண்டனை விதித்திருந்தார்.

Summary

April 3, 1976: The Tearful Letter of a Student Who Earned a Degree by Cheating!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.