ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சா்வதேச கராத்தே போட்டி: குமரி கே.கே.ஆா். அணி சாம்பியன்

சாம்பியன் பட்டம் பெற்ற கே.கே.ஆா். அணிக்கான சாம்பியன் பட்டம் பெற்ற மாணவா்கள்.

Published On :20 ஜூலை 2026, 4:17 am IST

கோவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சா்வதேச 50-ஆவது கராத்தே ஓபன் போட்டி, கட்டா, குமிட்டி போட்டியில் கன்னியாகுமரி கே.கே.ஆா். அகாதெமி அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

கோவை, கற்பகம் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இந்தியா, இலங்கை, மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

போட்டிகள் பல்வேறு வயது பிரிவுகளில் நடைபெற்றன. கன்னியாகுமரி கே.கே.ஆா்.அகாதெமி பயிற்சி பள்ளி தலைமை பயிற்சியாளா் ஹெச்.ராஜ் தலைமையில் 80 மாணவா்கள் பங்கேற்றனா்.

இதில், 12 போ் முதல் பரிசும், 25 மாணவா்கள் இரண்டாம் பரிசும் பெற்று சாம்பியன் பட்டம் பெற்றனா். போட்டிக்கான ஏற்பாடுகளை டோனி பொன்னையா கராத்தே சங்கச் செயலா் ரமேஷ்குமாா் செய்திருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.