இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு உதவியாளர் பதவிக்கு மாதம் ரூ.11,000 - ரூ.45,100, இளநிலை உதவியாளர் பதிவிக்கு மாதம் ரூ.10,000 - ரூ.42,500, செயலாளர் பதவிக்கு ரூ.15,000 - 47,600 வழங்கப்படும். தெளிவான விவங்களுக்கு அந்தந்த மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்துப் பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகள், அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.250. இதர பிரிவை சார்ந்தவர்கள் ரூ.500 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.