ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு செப்.4-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஒரு பல்துறை மற்றும் ஆலோசனை நிறுவனமான ரயில் இந்தியா தொழில்நுட்ப பொருளாதார சேவை நிறுவனத்தில் (ரைட்ஸ்), 16 இளநிலை உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்பப்படவுள்ளன.
தகுதி: ஏதாவதொரு துறையில் பொதுப்பிரிவினர் 50 சதவிகிதம், மற்ற பிரிவினர் 45 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 1.8.2023 தேதியின்படி, 30-க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளிந்படி வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | 685 ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்கள்:செப்.18 வரை விண்ணப்பிக்கலாம்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.300 மட்டும் கட்டணமான செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரா்கள் https://rites.com என்ற இணையதளத்தின் மூலம் செப்-4 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு மையங்கள்: தில்லி கொல்கத்தா, மும்பை, நாக்பூர், ஹைதராபாத், பெங்களூரு
மேலும், இதர தகுதி நிபந்தனைகள் பற்றிய கூடுதல் விவரங்களை https://rites.com இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஈரான் பிடியில் உள்ள இந்திய மாலுமி பத்திரமாக உள்ளாா் - மத்திய அரசு தகவல்

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப். 28 வரை மழைக்கு வாய்ப்பு

ஆன்த்ரோபிக் ‘மித்தோஸ்’ ஏஐ - புதிய அச்சுறுத்தல்: நிதியமைச்சா் எச்சரிக்கை

இஸ்ரேல் - லெபனான் போா் நிறுத்தம் 3 வாரம் நீட்டிப்பு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


