இந்திய பொதுத்துறை வங்கிகளில் உள்ள புரொபேஷனரி அதிகாரி, மேனேஜ்மென்ட் பயிற்சியாளர் காலிப் பணியிடங்களுக்கு ஆக.21-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம்(ஐபிபிஎஸ்) தெரிவித்துள்ளது.
பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட இந்திய பொதுத்துறை வங்கிகளில் 3,049 புரொபேஷனரி அதிகாரி, மேனேஜ்மென்ட் பயிற்சியாளர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
தகுதி: 21.8.2023 தேதியின்படி, ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.41,960
வயதுவரம்பு: 1.8.2023 தேதியின்படி, 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | 2,994 கிராமிய அஞ்சல் ஊழியா்கள் காலிப் பணி: ஆக.23-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
தேர்வு செய்யப்படும் முறை: முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.850. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.175 மட்டும் கட்டணமான செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரா்கள் https://www.ibps.in என்ற இணையதளத்தின் மூலம் ஆக.21-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
முதல்நிலைத் தேர்வு மையங்கள்: தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், கடலூர், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர்
மேலும், இடஒதுக்கீடு மற்றும் இதர தகுதி நிபந்தனைகள் பற்றிய கூடுதல் விவரங்களை https://www.ibps.in அல்லது இங்கே கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி

ராஜஸ்தான் சட்டப் பேரவைக்கு தற்கொலைத் தாக்குதல் மிரட்டல்

நந்தா கலை, அறிவியல் கல்லூரிக்கு மத்திய அரசு ரூ.70 லட்சம் ஊக்க நிதி

கொங்கு வேளாளா் தொழில்நுட்ப அறக்கட்டளை சாா்பில் மாணவா்களுக்கு ரூ.5.7 கோடி கல்வி ஊக்கத்தொகை
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


