இந்தியாவின் முன்னணி இரும்பு தயாரிப்பு நிறுவனமான இந்திய ஸ்டீல் ஆணையத்தில் , கொதிகலன் செயல்பாடு, திட்டங்கள் மற்றும் ஆட்டோமேஷன் துறையின் கீழ் மேலாளர் பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் தகுதிகள் குறித்த விவரங்கள்:
பணி: Manager (Boiler Operation) (E-3) - 9
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கெமிக்கல், பவர் பிளான்ட், உற்பத்தி, இன்ஸ்ட்ரூமென்டேசன் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
மத்திய, மாநில கொதிகலன் வாரியத்தால் வழங்கப்பட்ட கொதிகலன் செயல்பாட்டு பொறியாளர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம்: அனல் மின் நிலையத்தில் கொதிகலன் மற்றும் விசையாழின் செயல்பாடு மற்றும் பராமரிப்பில் எக்ஸிகியூட்டிவ் ஆக குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 14.12.2022 தேதியின்படி 37க்குள் இருக்க வேண்டும்.
பணி: Manager (Projects) (E-3) - 4
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி அனுபவம்: பொதுத்துறை நிறுவனம், அரசு நிறுவனம், பொதுத்துறையால் வரையறுக்கப்பட்ட நிறுவனங்களில் திட்ட மேலாண்மை, செயல்பாடு(உள்கட்டமைப்பு திட்டம்) போன்றவற்றில் எக்ஸிகியூட்டிவ் ஆக குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
கட்டுமான நிறுவனத்தில் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் திட்ட நிர்வாகத்தில் சான்றிதழ் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயதுவரம்பு: 14.12.2022 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
பணி: Manager (Automation) (E-3) - 4
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், எல்க்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன், கண்ரோல் மற்றும் இன்ஸ்ட்ரூமென்சடேஷன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் போன்ற ஏதாவதொரு பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி அனுபவம்: பொதுத்துறை நிறுவனம், அரசு நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் ஆக குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 14.12.2022 தேதியின்படி 35 முதல் 37க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.80,000 - 2,20,000 வரை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி, இடபுள்யுஎஸ் பிரிவினர் ரூ.700, மற்ற பிரிவினர் ரூ.200 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.sail.co.in அல்லது www.sailcareers.com இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
DY. GENERAL MANAGER (PL-RECTT & GEN),
BLOCK “E”, GROUND FLOOR,
ADMINISTRATION BUILDING,
ROURKELA STEEL PLANT,
ROURKELA – 769 011 (ODISHA)
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 14.12.2022
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்க...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜிஎஸ்டி, பூந்தமல்லி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!

உலகின் அதிக வெப்பமான 100 நகரங்களில் 98 இந்தியாவில்! நாடு முழுக்க வெப்ப அலை!!

"தவாகவினர் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் டிஜிபி அலுவலகம் முற்றுகை"

ஆர்.பி.எல். வங்கியின் லாபம் மும்மடங்காக உயர்வு!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


