ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ரூ. 1,20,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: எம்.எஸ்சி முடித்தவர்களுக்கு வாய்ப்பு

என்டிபிசி லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 40 உதவி வேதியியலாளர் (பயிற்சியாளர்) பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...

NTPC Recruitment for Assistant Chemist Traine Posts

என்டிபிசி நிறுவனத்தில் உதவி வேதியியலாளர் (பயிற்சியாளர்) பணி - கோப்புப்படம்

Published On :10 ஜூலை 2026, 11:51 am IST

இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த மின்சார நிறுவனமான என்டிபிசி லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 40 உதவி வேதியியலாளர் (பயிற்சியாளர்) பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 09/2026

பணி: Assistant Chemist (Trainee) (ACT)

காலியிடங்கள்: 40

சம்பளம்: மாதம் ரூ.30,000 - 1,20,000

வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி சலுகை வழங்கப்படும்

தகுதி: வேதியியல் பாடத்தில் முதல் வகுப்பில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்தவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் முறையில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வில் வேதியியல் பாடப்பிரிவு, நிர்வாகத் திறன், நிர்வாகத் திறன், பொது அறிவு தொடர்பான கேள்விகள் கேட்கப்படும். இதில் வெற்றி பெறுபவர்கள் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்படுவர். சான்றிதழ் சரிபார்த்தலின்போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும். பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.30,000 உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு பயிற்சி வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமான முடிப்பவர்கள் மட்டும் என்டிபிசி-ல் நிரந்தரமாக பணியமர்த்தப்படுவர்.

நிரந்தர பணிக்கு தேர்வு செய்யப்படும் பொது மற்றும் ஓபிசி, இடபுள்யுஎஸ் பிரிவினர்கள் ரூ.2,50,000 மதிப்பிலான பணி உத்தரவாத பத்திரமும், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்கள் ரூ.1,25,000 மதிப்பி லான பணி உத்திரவாத பத்திரமும் சமர்ப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம், தேதி போன்ற விபரங்கள் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர்கள் ரூ.500. பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை என்டிபிசி இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள கட்டணம் செலுத்துவதற்கான கூப்பனை பயன்படுத்தி ஆன்லைன் முறையில் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ntpc.co.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.7.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

NTPC Recruitment for 40 Assistant Chemist Trainee Posts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.