
இந்திய நெடுஞ்சாலைகள் மேலாண்மை நிறுவனத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!
இந்திய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து...

இந்திய நெடுஞ்சாலைகள் மேலாண்மை நிறுவனத்தில் வேலை - IHMCL
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மற்றும் அதன் ஒப்பந்ததாரர்கள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றால் கூட்டாக , 1956-ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனம், இந்திய நெடுஞ்சாலைகள் மேலாண்மை நிறுவனம்.
இந்த நிறுவனம் தேசிய நெடுஞ்சாலைகளில் திறமையான மின்னணு சுங்கக் கட்டண வசூல் முறையைச் செயல்படுத்தவும் நிர்வகிக்கவும், அத்துடன் நெடுஞ்சாலை மேலாண்மையை மேம்படுத்தவும் போக்குவரத்துச் சூழலைச் சீரமைக்கவும் 'அறிவுசார் போக்குவரத்து அமைப்புகளை' அமல்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. மேலும், ஐடிஏ ஊதிய முறையைப் பின்பற்றும் ஒரு அரசு சாரா நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் நேரடி ஆள்சேர்ப்பு மூலம் நிரப்பப்பட உள்ள சிஸ்டம் இன்ஜினியர் பணிக்கு தகுதியும் ஆர்வுமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்த விவரம்...
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: IHMCL/HR/Recruit./03/2026/04
பணி: Systems Engineer(ITS)
காலியிடங்கள்: 30
சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000
தகுதி: பொறியியல் துறையில் தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ், செய்யறிவு(ஏஐ) போன்ற ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 2.8.2026 தேதியின்படி 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கேட் நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.ihmcl.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 2.8.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
Indian Highways Management Company Limited (IHMCL) is a company jointly promoted by National Highways Authority of India (NHAI) along with its Concessionaires and Financial Institutions...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







