ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... பொதுத்துறை வங்கிகளில் 11,403 காலியிடங்களுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத்துறை வங்கிகளில் காலியாகவுள்ள 11,403 கிளார்க், வாடிக்கையாளர் உதவி பணியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...

IBPS Recruitment Notification 2026-27

பொதுத்துறை வங்கிகளில் 11,403 கிளார்க், வாடிக்கையாளர் உதவி பணியாளர்கள் பணி - கோப்புப்படம்

Published On :20 ஆகஸ்ட் 2026, 2:58 pm IST

நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளில் காலியாகவுள்ள 11,403 கிளார்க், வாடிக்கையாளர் உதவி பணியாளர்கள் (Customer Service Associates) பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்திய வங்கிப் பணியாளர் தேர்வாணையம்(ஐபிபிஎஸ்) வெளியிட்டுள்ள 11,403 பணியிடங்களில் தமிழ்நாட்டிற்கு மட்டும் 675 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணியிடங்களுக்கு இந்திய வங்கிப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இது குறித்த விவரங்கள் வருமாறு:

பணி: Customer Service Associates

காலியிடங்கள்: 11,403

சம்பளம்: மாதம் ரூ.24,050 - 64,480

தகுதி: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவதொரு கல்வி நிறுவனத்தில் ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் காலியிடம் ஏற்பட்டுள்ள மாநிலத்தின் அலுவல் மொழியில் எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.8.2026 தேதியின்படி 20 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: இந்திய வங்கிப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஆன்லைன் எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத்தேர்வானது இரண்டு கட்டங்களாக நடைபெறும்.

முதல் கட்ட எழுத்துத்தேர்வு ஆன்லைன் முறையில் அக்டோபர் 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெறும். முதல் கட்ட தேர்வு 100 மதிப்பெண்களுக்கு ஆங்கிலம், திறனறிதல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் இருந்து 100 கேள்விகளுக்கு நடத்தப்படும். ஒவ்வொரு பகுதிக்கும் 20 நிமிடங்கள் என மொத்தம் ஒரு மணி நேரம் ஒதுக்கப்படும். இதில் தேர்ச்சி பெறுவோர் டிசம்பர் 27 ஆம் தேதி நடைபெறும் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். அதில் ஆங்கிலம், திறனறிதல், கணிதம் மற்றும் பொது, நிதி அறிவு தொடர்பான 155 கேள்விகள் இடம்பெறும். தவறான ஒவ்வொரு பதிலுக்கும் 0.25 நெகட்டிவ் மதிப்பெண் கழிக்கப்படம். நேர்முகத் தேர்வு கிடையாது.

தமிழ்நாட்டில் முதல் கட்ட எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர். கடலூர், விழுப்புரம், திருப்பூர், காஞ்சிபுரம் ஆகிய நகரங்களில் நடைபெறும்.

தமிழ்நாட்டில் முதன்மைத் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, மதுரை, கோயம்புத்தூர், நாமக்கல், சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் மற்றும் கடலூர் ஆகிய நகரங்களில் நடைபெறும்.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு ஆன்லைன் முறையில் இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தில் அதுகுறித்து தெரிவிக்கவும்.

எழுத்துத்தேர்வு கேள்வித்தாள் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தியில் அமைந்திருக்கும். எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம், மதிப்பெண்கள் விவரம், வங்கிகள் வாரியாக ஏற்பட்டுள்ள காலியிடங்கள் விவரங்கள், காலியிடப் பகிர்வு, ஐபிபிஎஸ் தேர்வில் பங்கு பெறும் வங்கிகள் விவரம் ஆகியவை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர்களுக்கு ரூ.175. இதர பிரிவினர்களுக்கு ரூ.850. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ibps.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 21.8.2026

வங்கி பணிகளில் சேருவதே குறிக்கோளாக கொண்டு தயாராகி வந்த தகுதியான பட்டதாரி இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறவும்.

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

IBPS Clerk Recruitment 2026 for 11403 Customer Service Associates Posts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.