
மாதம் ரூ.1,60,000 சம்பளத்தில் இந்திய நாணயங்கள் உற்பத்தி நிறுவனத்தில் உதவி மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?
இந்திய நாணயங்கள் உற்பத்தி நிறுவனத்தில் உதவி மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...

மாதம் ரூ.1,60,000 சம்பளத்தில் இந்திய நாணயங்கள் உற்பத்தி நிறுவனத்தில் உதவி மேலாளர் பணி - SPMCIL
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய நாணயங்கள் உற்பத்தி நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 24 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 02/2026
பணி: Deputy Manager(Information Technology App Developer)
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000
தகுதி: பொறியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் கணினி அறிவியல், ஐடி, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் பிரிவில் பிஇ, பி.டெக் முடித்து, 3 ஆண்டுகள் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Assistant Manager
பிரிவு: HR
காலியிடங்கள்: 4
தகுதி: PM & IR, MSW,Business Administation Management பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பிரிவு: F & A
காலியிடங்கள்: 9
தகுதி: பி.காம் தேர்ச்சியுடன் சிஏ, ஐசிடபுள்யுஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பிரிவு: MM
காலியிடங்கள்: 4
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கூழ் மற்றும் காகிதத் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ், அச்சுத் தொழில்நுட்பம் ஆகிய ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் வணிக நிர்வாகத்தில் முதுநிலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பிரிவு: IT
காலியிடங்கள்: 2:
தகுதி: பொறியியல் துறையில் கணினி, ஐடி பிரிவில் முதல் வகுப்பில் பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பிரிவு: OL
காலியிடம்: 1
தகுதி: இந்தி மற்றும் ஆங்கில பாடங்களுடன் முதல் வகுப்பில் முதுகலை பட்டம் தேர்ச்சியுடன் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவமும், இந்தியில் இருந்து ஆங்கிலம், ஆங்கிலத்தில் இருந்து இந்திக்கு மொழிப்பெயர்ப்பு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
பிரிவு: Safety
காலியிடங்கள்: 3
தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம், இயற்பியல், வேதியியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000
வயதுவரம்பு: மேற்கண்ட பணிகளுக்கு 30 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.1000. எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு ரூ.200. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.spmcil.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 24.8.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.SPMCIL Recruitment 2026 for Assistant Manager Posts
Summary
Welcome to Security Printing and Minting Corporation of India

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... பொதுத்துறை வங்கிகளில் 11,403 காலியிடங்களுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






