சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

இந்திய அணுசக்திக் கழகத்தில் வேலை வேண்டுமா..? - உடனே விண்ணப்பிக்கவும்!

மும்பையில் செயல்பட்டு வரும் இந்திய அணுசக்திக் கழகத்தில்(என்பிசிஐஎல்) நிரப்பப்பட உள்ள 330 டிரெய்னி பணியிடங்கள் குறித்து...

News image

இந்திய அணுசக்திக் கழகத்தில் வேலை வேண்டுமா..? - NPCIL

Updated On :29 ஏப்ரல் 2026, 1:13 pm IST

மும்பையில் செயல்பட்டு வரும் இந்திய அணுசக்திக் கழகத்தில்(என்பிசிஐஎல்) நிரப்பப்பட உள்ள 330 டிரெய்னி பணியிடங்களுக்கான பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: NPCIL/HQ/HRM/ET/2026/02

பணி: Executive Trainee(GATE-2026)

காலியிடங்கள்: 330

பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்:

1. Mechanical - 125

2. Chemical - 40

3. Electrical - 65

4. Electronics - 50

5. Instrumentation - 15

6. Civil - 35

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30.4.2026 தேதியின்படி 26 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: 2024, 2025, 2026 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற கேட் தேர்வுகள் ஏதாவதொன்றில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுவர்களுக்கு ஒரு ஆண்டு பயிற்சி வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினர், மாற்றுத்திறனாளி, பெண்கள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதர அனைத்து பிரிவினருக்கும் ரூ.500 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.npcil.careers.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.4.2026

விண்ணப்பிப்போரின் இதர விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

NPCIL Announcement to induct Executive Trainees in Mechanical, Chemical, Electrical, Electronics, Instrumentation & Civil disciplines by shortlisting candidates based on GATE Scores.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.