ஆயுதத் தொழிற்சாலையில் காலியாகவுள்ள 265 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்த விவரங்களை பார்ப்போம்:
பணி: Tenure Based CPW
காலியிடங்கள்: 265
சம்பளம்: மாதம் ரூ. 19,900 +டிஏ
வயது வரம்பு : 27.3.2026 தேதியின்படி 18 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, முன்னாள் ராணுவத்தினர்களுக்கு அரசு விதி முறைப்படி சலுகை வழங்கப்படும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் வேதியியல் ஆலை உதவியாளர்-இயக்குநர் டிரேடில் ஐடிஐ முடித்து என்ஏசி, என்டிசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், தகடு உலோகப் பணியாளர், மின் பணியாளர், மின்னணு இயந்திரப் பணியாளர், கொதிகலன் உதவியாளர், தொழில்துறை மின்னணு இயந்திரப் பணியாளர், குளிரூட்டி இயந்திரப் பணியாளர் போன்ற ஏதாவதொரு டிரேடில் ஐடிஐ முடித்து தொழில் பழகுநர் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் ஐடிஐ டிரேடில் பெற்றுள்ள மதிப்பெண்கள், திறன் தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் பணிக்கு தேர்ந் தெடுக்கப்படுவர். தேர்ந்தெடுக் கப்படும் முறை மற்றும் நேர் முகத்தேர்வு நடைபெறும் இடம், தேதி பற்றிய விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ddpdoo.gov.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களிலும் சுய சான்றொப்பமிட்டு கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்பும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிட வேண்டும்.
அஞ்சல் முகவரி
The Chief General Manager (Ordnance Factory), Itarsi, Narmadapuram (Dt.), Madya Pradesh, Pin - 461 122.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
Offline applications are invited for vacancies of Tenure based CPW (Chemical Process Worker) Personnel on CONTRACT BASIS to work in Ordnance Factory Itarsi, Dist. Narmadapuram, Madhya Pradesh
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராணுவ ஆயுத தொழிற்சாலையில் வேலை: ஐடிஐ முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்!

முஜேசா் தொழிற்பேட்டையில் தீ விபத்து

தொழிற்சாலையில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி காா் தொழிற்சாலையில் தீயணைப்பு ஒத்திகை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை



