இந்திய கடற்படையின் 10+2 (பி.டெக்) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இலவச பி.டெக் படித்து முடித்து இந்திய கடற்படையில் அதிகாரியாக பணிபுரிய விரும்பும் திருமணமாகாத பெண்கள் மற்றும் ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Officer(Executive & Technical Branch)
காலியிடங்கள்: 40
வயதுவரம்பு: 2.7.2005-க்கும் 1.1.2008-க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.
தகுதி: இயற்பியல், வேதியியல், கணித பாடங்கள் அடங்கிய பிரிவில் குறைந்தது 70 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். மேலும் JEE Main Exam - 2024 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: JEE Main Exam - 2024 தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இதுகுறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் மாதம்: செப்டம்பர் 2024.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: பெங்களூரு, விசாகப்பட்டினம், கொல்கத்தா, போபால்
தேர்வு செய்யப்படுவோர் இந்திய கடற்படையால் வழங்கப்படும் 4 ஆண்டு இலவச பி.டெக் படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவர். அதாவது Applied Electronics, Mechanical, Communication, Electronics போன்ற ஏதாவதொரு பிரிவை தேர்வு செய்து படிக்கலாம்.
மேற்கண்ட படிப்பிற்கான அனைத்து செலவையும் இந்திய கடற்படையால் வழங்கப்படும். படிப்பை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியமர்த்தப்படுவர். நேர்முகத் தேர்வில் கலந்துகொள்வோருக்கு ஏசி ரயில் கட்டணம் வழங்கப்படும்ய பி.டெக் படிப்பிற்கான வகுப்பு ஜனவரி 2025-இல் தொடங்கும்.
கேரளம் மாநிலம் எழிமலாவில் உள்ள இந்திய கடற்படை கல்லூரியில் 4 ஆண்டு பி.டெக் படிப்பு வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணபிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 20.7.2024
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது?

10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?

பாதுகாப்பு ஆராய்ச்சி ஆய்வகத்தில் இளநிலை ஆராய்ச்சியாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

தோல்விக்கும் தோள் கொடுப்போம்!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை




