பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு: பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைகள்!
இந்திய பவர்கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி பொறியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இந்திய பவர்கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி பொறியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.CC/1/2022.
பணி: Assistant Engineer Trainee
பிரிவுவாரியான காலியிடங்கள்:
1. Computer Science - 37
2. Electrical - 60
3. Civil - 04
4. Electronics - 04
சம்பளம்: மாதம் ரூ.38,500
வயதுவரம்பு: 31.12.2021 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
உதவித்தொகை: மாதம் ரூ.40,000
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ, பிடெக், பி.எஸ்சி(இன்ஜி) முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: குழு விவாதம். நேர்முகத் தேர்வு மற்றும் கேட்-2021 இல் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டண செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: ww.powergrid.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.02.2022
மேலும் விவரங்கள் அறிய recruitment@powergrid.co.in என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புக் கொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...