10-வது தேர்ச்சிபெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலை
இந்தி பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நாடு முழுவதும் செயல்பட்டு வரும் துப்பாக்கித் தொழிற்சாலையில் (Ordnance Factory)


இந்தி பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நாடு முழுவதும் செயல்பட்டு வரும் துப்பாக்கித் தொழிற்சாலையில் (Ordnance Factory)காலியாக உள்ள 6 ஆயிரத்திற்கும் அதிகாமான தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு (Apprentice)கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Central Govt Apprentice Training
காலியிடங்கள்: 6060
தகுதி: மேற்கண்ட துறையில் ஐடிஐ படிக்காதவர்கள் மற்றும் ஐடிஐ படித்தவர்கள் என இரண்டு பிரிவுகளாக பணியிடங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில், ஐடிஐ படிக்காதவர்கள் பிரிவுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 50 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், கணிதம், அறிவியல் பாடத்தில் 40 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஐடிஐ முடித்தவர்கள் பிரிவுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ ஆகிய இரண்டிலும் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 09.02.2020 தேதியின்படி 15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, எஸ்.சி, எஸ்.டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்.டி, பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், திருநங்கைகள் உள்ளிட்டோருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது
விண்ணப்பிக்கும் முறை: https://www.ofb.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.ofb.gov.in/uploads/Documents/e16a189ba7c652c4d9b22ce033f05c82.pdf என்ற லிங்கை கிளிக் செய்து கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை படித்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.02.2020
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...