திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

வேலை... வேலை... வேலை... இந்திய நாடாளுமன்றத்தில் நிருபர் வேலை

இந்திய நாடாளுமன்றத்தில் காலியாக உள்ள  21 நாடாளுமன்ற நிருபர் பணியிடங்களை நேரடி  நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:23 pm

ஆர். வெங்கடேசன்

இந்திய நாடாளுமன்றத்தில் காலியாக உள்ள 21 நாடாளுமன்ற நிருபர் பணியிடங்களை நேரடி  நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 21

பணி: Parliamentary Reporter

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று, ஆங்கிலம் மற்றும் இந்தியில் சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 160 வார்த்தைகளை எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 28.01.2020 தேதியின்படி 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சுருக்கெழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:  http://loksabhaph.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Recruitment Branch, Lok Sabha Secretariat, Room No. 521, Parliament House Annexe, New Delhi-110001

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://loksabhadocs.nic.in/JRCell/Module/Notice/approved%20_Final%20Advt%202-2019%20(Reporter).pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.01.2020

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.