இது உங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு செய்தி: 982 அரசு ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தில்லி அரசின் கல்வித்துறையில் காலியாக உள்ள 982 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு


தில்லி அரசின் கல்வித்துறையில் காலியாக உள்ள 982 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Assistant Teacher (Primary) - 637
பணி: Assistant Teacher (Nursery) - 141
தகுதி: இந்தி மற்றும் ஆங்கிலத்தை மொழி பாடங்களாக கொண்டு ஏதாவதொரு பாடப்பிரிவில் பிளஸ் டூ தேர்த்தி பெற்று Primary அல்லது Nursery ஆசிரியர் பயிற்சியில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மத்திய அரசு நடத்தும் சிடிஇடி (CTET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Junior Engineer JE Civil - 204
பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4,200
வயதுவரம்பு: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: Delhi Subordinate Services Selection Board நடத்தும் எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த வேண்டாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.dsssbonline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்
டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://dsssb.delhi.gov.in/sites/default/files/All-PDF/VACNCYNOTICENEW0001.pdf
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.10.2019
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...