Jobs TN Government: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக அலுவலகத்தில் வேலை வேண்டுமா?
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக அலுவலகத்தில் காலியாக உள்ள ஊர்தி ஓட்டுநர் பணியிங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு


ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக அலுவலகத்தில் காலியாக உள்ள ஊர்தி ஓட்டுநர் பணியிங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஊர்தி ஓட்டுநர் -02
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000 என்ற சம்பள ஏற்ற முறையில் அரசு நிர்ணயம் செய்யும் படிகளுடன்
வயதுவரம்பு: 01.07.2019 அன்று 18 வயது பூர்த்தியடைந்து பொதுப்பிரிவினர் 30 வயதிற்குள்ளும், பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் அல்லாதவர்) 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வாகனங்கள் ஓட்டுவதில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.tnrd.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: இயக்குநர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம், 4வது தளம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை - 15 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.tnrd.gov.in/advertisement/Driver%20PDF%20NOTIFICATION%202019.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பப் படிவங்கள் பதிவிறக்கம் செய்ய https://www.tnrd.gov.in/advertisement/Driver%20PDF%20APPLICATION%20FORM.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.10.2019
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...