/

ரூ.2.2 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா? 

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய எண்ணெய் நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த கணக்கு அதிகாரி மற்றும் கணக்கு மேலாளர்

News image
Updated On :31 ஜனவரி 2024, 10:18 am

ஆர். வெங்கடேசன்



மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய எண்ணெய் நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த கணக்கு அதிகாரி மற்றும் கணக்கு மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 10

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Manager (Accounts) / Manager (Internal Audit) - 01
சம்பளம்: மாதம் ரூ. 80,000 - 2,20,000
பணி அனுபவம்: குறைந்தபட்சம் 3 ஆண்டு

பணி: Senior Accounts Officer / Senior Internal Auditor  -  09
சம்பளம்: மாதம் ரூ.60,000 -1,80,
தகுதி: Associate Member of ICAI, ICMAI 
பணி அனுபவம்: குறைந்தபட்சம் 1 ஆண்டு 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.oil-india.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.10.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.oil-india.com/Document/Career/Recruitment-of-F-A-Executives-Detailed-Advertisement.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.