2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

வேலை... வேலை... வேலை... துணை ராணுவ படைகளில் 54 ஆயிரத்து 953 பணியிடங்கள்: எஸ்எஸ்சி அறிவிப்பு

துணை ராணுவ படைகளில் காலியாக உள்ள 54 ஆயிரத்து 953 காவலர்கள் (ஜெனரல் டியூட்டி) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எஸ்எஸ்சி

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:20 pm

ஆர். வெங்கடேசன்


துணை ராணுவ படைகளில் காலியாக உள்ள 54 ஆயிரத்து 953 காவலர்கள் (ஜெனரல் டியூட்டி) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எஸ்எஸ்சி எனப்படும் ஸ்டாப் செலக்சன் கமிஷன் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்தியாவைச் சேர்ந்த இருபாலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

தேசத்தின் துணை ராணுவ படைகளான எல்லைக் காவல் படை (பிஎஸ்எப்), தொழிற்சாலைகள் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்), மத்திய ஆயுதப்படை (சிஆர்பிஎப்), சசாஸ்திரா சீமா பல் (எஸ்எஸ்பி), இந்திய திபெத்திய எல்லைக் காவல் படை (ஐடிபிபீ), அசாம் ரைபிள் போன்ற படைப்பிரிவுகளில் காலியாக உள்ள ஆண்களுக்கான 47.307 காவலர் பணியிடங்களும், பெண்களுக்கான 7,646 காவலர் பணியிடங்கள் என 54 ஆயிரத்து 953 பணியிடங்களும் மத்திய அரசுப் பணி தேர்வாணையங்களில் ஒன்றாக விளங்கும் எஸ்எஸ்சி எனப்படும் ஸ்டாப் செலக்சன் கமிஷன் (எஸ்.எஸ்.சி.) நடத்தும் எழுத்துத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளதால், தகுதியும் விருப்பமும் இந்தியாவின் இருபாலர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்ரன. 

பணி: Constable (GD) 

காலியிடங்கள்: 54,953

தகுதி: பத்தாம் வகுப்பு (மெட்ரிக்குலேசன்) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.08.2018 தேதியில்படி 18 முதல் 23க்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது அரசுவிதிகளின்படி எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்திற்கு (ஓபிசி) 6 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்திற்கு (எஸ்சி, எஸ்டி) 8 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: எஸ்எஸ்சி நடத்தும் ஆன்லைன் எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் சேர்வு செய்யப்பட்டு, உடற் தகுதி தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்புகள் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ssc.nic.in அல்லது www.ssconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.08.2018

மேலும் முழுமைாயான விவரங்கள் அறிய இங்கு கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.