நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் சம்பளத்தில் வேலை வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்!

பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் காலியாக உள்ள Air Traffic Contriller Trainees பணியிடங்களுக்கான அறிவிப்பு

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:49 pm

ஆர். வெங்கடேசன்


பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் காலியாக உள்ள Air Traffic Contriller Trainees பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: Air Traffic Contriller Trainees

காலியிடங்கள்: 13

சம்பளம்: மாதம் ரூ.30,000 - 1,20,000 

வயதுவரம்பு: 19.12.2018 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். 

தகுதி: பொறியியல் துறையில் கணினி அறிவியல், ஐடி, தகவல்தொடர்பு அறிவியல், கணினி சிஸ்டம், மென்பொருள் பொறியியல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்சட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்டேஷன், எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வும் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: பெங்களூரு.

பயிற்சி அளிக்கப்படும் இடம்: அலகாபாத் அல்லது ஹைதராபாத்தில் உள்ள ஏர்போர்ஸ் அகடமியில் பயிற்சி அளிக்கப்படும்.

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.34,690 உதவித்தொகையாக வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.hal-india.in என்ற இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://hal-india.co.in/Common/Uploads/Resumes/961_CareerPDF1_Advertisement%20ATC%20Trainees%2028112018.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.12.2018

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.