தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

ஆவின் நிறுவனத்தில் வேலை

தமிழக அரசு நிறுவனமான ஆவின் நிறுவனம், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களின் வரம்புக்குட்பட்ட

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:35 pm

ஆர். வெங்கடேசன்

தமிழக அரசு நிறுவனமான ஆவின் நிறுவனம், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களின் வரம்புக்குட்பட்ட வர்த்தக நிறுவனமாகும். இந்நிறுவனம் முக்கிய வர்த்தக நோக்கம் தமிழ்நாட்டில் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்வதாகும். தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு முறையாக பால் பண்ணை மேம்பாட்டுத் துறை என்று குறிப்பிடப்படுகிறது. இந்த துறை 1958 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமையகமான ஆவின் இல்லம் சென்னை மாதவரம் பால் காலனியில் தற்போது செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனம் கொழுப்பு சதவிகிதம் அடிப்படையில் நான்கு விதமான பால் உற்பத்தியை செய்து வருகிறது. பால் கோவா, மைசூர்பாக், குலாப் ஜாமூன், கலாக்கண்ட், வெண்ணெய் பால், லசி, தயிர் மற்றும் ஐஸ் க்ரீம் போன்ற பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

தற்போது இந்நிறுவனத்தில் 2017 ஆம் ஆண்டிற்கான நிரப்பப்பட உள்ள மேலாளர், தனியார் செயலாளர் மற்றும் டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Manager - 03
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,700

பணி: Private Secretary Grade -III - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800

பணி: Technician (Electrical) - 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400

வயதுவரம்பு: 01.01.2017 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ஒசி, எம்பிசி, பிசி பிரிவினருக்கு ரூ.250. இதனை பொது மேலாளர், திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம், திருநெல்வேலி - 7 என்ற பெயருக்கு திருநெல்வேலி செலுத்தத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The General Manager,
The Tirunelveli District Co-operative Milk Producers Union Ltd.,
Reddiarpatty Road, Perumalpuram Post,
Tirunelveli – 627 007

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.06.2017
மேலும் தகுதி, அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.aavinmilk.com/tvelihr050517.html என்ற அதிகாரப்பூர்வ லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.