ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

தமிழ்நாடு அங்கன்வாடியில் அங்கன்வாடி தொழிலாளர், உதவியாளர் பணி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் உள்ள அங்கன்வாடி மையத்தோடு இணைந்த

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:34 pm

ஆர். வெங்கடேசன்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் உள்ள அங்கன்வாடி மையத்தோடு இணைந்த 15 குழந்தைகள் காப்பகப் பணியாளர்கள், 15 குழந்தைகள் காப்பக சமையலர், உதவியாளர்கள் பணியிடங்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் புதிதாக ஆட்களை தேர்வு செய்ய 04.11.2016 அன்று பிற்பகல் 5 மணிக்குள் சம்மந்தப்பட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் பெண்கள் மட்டும் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் மனுதாரர்கள் சம்மந்தப்பட்ட வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கான நேர்முகத் தேர்வு 08.11.2016 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை குழந்தைகள் காப்பக பணியாளர் பதவிக்கும் மாலை 2 மணி முதல் 5 மணி வரை சமையலர், உதவியாளர் பதவிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் வளாகம் காஞ்சிபுரத்தில் வைத்து நடத்தப்படும்.
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் காலிபணியிடம் உள்ள ஊராட்சி மற்றும் ஊராட்சிக்குட்பட்ட குக்கிராமங்கலில் வசிப்பவராகவும், நகராட்சி பகுதிகளில் காலிபணியிடம் உள்ள பகுதி(வார்டு) அல்லது அருகில் உள்ள பகுதி (வார்டு) வசிப்பவராகவும் இருக்க வேண்டும்.
திருமணமான மகளிராக இருக்க வேண்டும். விதவை, ஆதரவற்ற விதவை, கணவரால் கைவிடப்பட்டவர், ஊணமுற்றவர்களுக்கு உரிய வகையில் சான்று சமர்ப்பிக்க வேண்டும்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 25 முதல் 35 வயதுக்குள் இருப்பவர்கள் குழந்தைகள் காப்பக பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு தொகுப்பு ஊதியமாக மாதம் ரூ.3,000 வழங்கப்படும். எழுத படிக்க தெரிந்த 20 முதல் 40 வயதுக்குள் இருப்பவர்கள் ஊதிவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு தொகுப்பு ஊதியமாக மாதம் ரூ.1,500 வழங்கப்படும்.
விண்ணப்பிப்பற்கான கடைசி தேதி: 04.11.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.kanchi.tn.nic.in/Pressrelease/pr_2016_370.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்க..
http://www.icds.tn.nic.in/files/AWW-Main.pdf
http://www.icds.tn.nic.in/files/AWH.pdf

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.