தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

மத்திய அரசு பணி: பொறியியல் பட்டதாரிகளுக்கான "பொறியியல் சேவை தேர்வு–2017" தேர்வு அறிவிப்பு

மத்திய அரசு பணி: பொறியியல் பட்டதாரிகளுக்கான "பொறியியல் சேவை தேர்வு–2017" தேர்வு அறிவிப்பு

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:24 pm

ஆர். வெங்கடேசன்

மத்திய அரசுத்துறைகளான இந்திய ரயில்வே, ரயில்வே ஸ்டோர்கள், இந்திய ராணுவ தொழிற்சாலைகள், மத்திய சாலைப் பணிகளுக்கான பிரிவு, நில அளவைத்துறை, எல்லையோர சாலைப் பணிகள் துறை, பாதுகாப்பு சேவைப் பணிகள், கடற்படை, மிலிடரி இன்ஜினீயரிங் சேவைப் பணிகள் சர்வேயர் மற்றும் மத்திய பொது இன்ஜினீயரிங் சேவைப் பணிகள் உள்ளிட்ட துறைகளின் பணியிடங்களுக்கான ‘பொறியியல் சேவை தேர்வு–2017’ எழுத்து தேர்வு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) வெளியிட்டடுள்ளது. இந்த தேர்வின் மூலம் 440 பணியிடங்கள் (உத்தேசமாக) நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: 01.01.2017 தேதியின்படி 21 - 30-க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.01.1987 மற்றும் 01.01.1996 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலி கம்யூனிகேசன்ஸ் போன்ற பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.200 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in  மற்றும் www.upsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.10.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.upsconline.nic.in  மற்றும் www.upsc.gov.in  இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.