டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஆவின் நிறுவனத்தில் மேலாளர், டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிமிடெட், (திருநெல்வேலி ஆவின்) நிறுவனத்தில்

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:11 pm

VASUDEVAN.K

திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிமிடெட், (திருநெல்வேலி ஆவின்) நிறுவனத்தில் 2016 - 2017-ஆம் ஆண்டிற்கான 17 மேலாளர், டெக்னீசியன் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.002/2016 தேதி: 22.08.2016
மொத்த காலியிடங்கள்: 17
பணி - காலியிடங்கள் விவரம்:
1. Manager (Veterinary) / (P & I) - 01
2. Manager (Marketing) - 01
3. Manager (Engineering) - 01
4. Deputy Manager (Dairying) - 03
5. Deputy Manager (System) - 01
6. Executive (Office) - 03
7. Extension Officer Grade - II - 04
8. Technician (Electrical) - 03
வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி கணக்கிடப்படும்.
தேர்வுக் கட்டணம்: ரூ.250. இதனை திருநெல்வேலியில் மாற்றத்தக்க வகையில் "The General Manager, Tirunelveli District Co-operative Milk Producers Union Ltd.,” என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள், டி.டி ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager , The Tirunelveli District Co-operative Milk Producers Union Ltd., Reddiarpatty Road, Perumalpuram Post, Tirunelveli – 627 007.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.09.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.aavinmilk.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.