திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

விமானப்படையில் பயிற்சியுடன் ஏர்மேன் பணி  

இந்திய ராணுவத்தின் முப்படை பிரிவுகளில் ஒன்றாக விளங்கும் விமானப்படையில் ‘ஏர்மேன்’ ‘குரூப் ஒய்’

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:10 pm

VASUDEVAN.K

இந்திய ராணுவத்தின் முப்படை பிரிவுகளில் ஒன்றாக விளங்கும் விமானப்படையில் ‘ஏர்மேன்’ ‘குரூப் ஒய்’ (நான் டெக்னிக்கல்) பயிற்சியில் தகுதியானவர்களை சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மணமாகாத இந்திய குடியுரிமை பெற்ற இளைஞர்கள் நேரடி ஆட்சேர்க்கை முகாமில் பங்கேற்று பயன் பெறலாம்.
இதற்கான ஆட்சேர்ப்பு முகாம் வரும் 26 முதல் 31 ஆம் தேதி வரை மதுரை, எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.

அரியலூர், சென்னை, கடலூர், தர்மபுரி, திருவள்ளூர், ஈரோடு, காஞ்சீபுரம், சேலம், கரூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, வேலூர், பெரம்பலூர், திருச்சி, விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆகஸ்ட் 26, 27-ஆம் தேதியில் நடைபெறும் தேர்வுகளில் பங்கு பெறலாம்.

கோவை, புதுக்கோட்டை, திருப்பூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவண்ணாமலை, திண்டுக்கல், திருவாரூர், தூத்துக்குடி, மதுரை, திருநெல்வேலி, விருதுநகர் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆகஸ்ட் 28, 29-ம் தேதிகளில் நடைபெறும் தேர்வுகளில் பங்கேற்கலாம். ஆகஸ்ட் 30, 31 தேதிகளில் இதர தேர்வு நடைமுறைகள் நடக்கின்றன.

கல்வித் தகுதி:  குரூப் ஒய் (நான்- டெக்னிக்கல்) ஆட்டோமொபைல் டெக்னீசியன், ஜி.டி.ஐ மற்றும் ஐ.ஏ.எப்.(பி) பிரிவில் சேர விரும்புபவர்கள், பிளஸ்-2, இன்டர்மீடியட் அல்லது அதற்கு இணையான தேர்வில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் 50 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம். குரூப் ஒய் (நான்-டெக்னிக்கல்) மெடிக்கல் அசிஸ்டன்ட் டிரேடு பயிற்சியில் சேர விரும்புபவர்கள் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்கள் அடங்கிய பிரிவில் பிளஸ்-2  இன்டர்மீடியட் படித்து 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 01.08.1996 மற்றும் 30.11.1999 ஆகிய இரு தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். அதாவது விண்ணப்ப தேதியில் 21க்குள் இருக்க வேண்டும்.

உடற்தகுதி: மெடிக்கல் அசிஸ்டன்ட் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 152.5 செ.மீட்டர் உயரமும், இதர பணிகளுக்கு 165 மற்றும் 175 செ.மீட்டர் உயரமும் பெற்றிருக்க வேண்டும். மார்பளவு 5 செ.மீ. விரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். வயது மற்றும் உயரத்திற்கேற்ற எடை அவசியம். பார்வைத்திறன், கேட்கும் திறன், பற்கள் மற்றும் உடல் நலம் போன்றவை மருத்துவ தகுதிக்கு உட்பட்டு இருக்கிறதா என சோதித்து அறியப்படும். அந்தந்த பணிக்கான சரியான உடற்தகுதி விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

தேர்வு செய்யும் முறை: எழுத்து தேர்வு, உடற்திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். ஒவ்வொரு பணிக்கும் குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் அளிக்கப்படும். ஆரம்பத்தில் இது 20 ஆண்டு காலத்தைக் கொண்ட பணி வாய்ப்பாகும். பின்னர் விருப்பம் மற்றும் தகுதிக்கேற்ப 57 வயது வரை பணி நீடிப்பு பெற முடியும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஆட்சேர்ப்பு முகாமில் பங்கேற்கலாம். விண்ணப்பதாரர்கள் காலை 7 மணிக்கே தேர்வுகள் மையங்களில் இருக்க வேண்டும்.  முதல் நாள் எழுத்து தேர்வும், இரண்டாவது நாளில் உடல் அளவு மற்றும் உடல்திறன் தேர்வுகளும் நடைபெறும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.airmenselection.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.