/

பவர் கிரிட் நிறுவனத்தில் டெக்னீசியன் பணி

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL) நிறுவனம் பொறியியல் துறையில் பட்டயம் பெற்றவர்களுக்கான டிப்ளமோ டிரெய்னி பணிக்கும், இளநிலை

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:05 am

ஆர். வெங்கடேசன்

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL) நிறுவனம் பொறியியல் துறையில் பட்டயம் பெற்றவர்களுக்கான டிப்ளமோ டிரெய்னி பணிக்கும், இளநிலை டெக்னீசியன் டிரெய்னி என 15 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். ER-II/01/2015

பணி - காலியிடங்கள் விவரம்:

1. Diploma Trainee - 10

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், சிவில், எல்க்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேசன் பிரிவில் 70 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.16,000 - 35,500

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300. எஸ்சி, எஸ்டி, பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

2. Junior Technician Trainee - 05

தகுதி: இரண்டு வருட எலக்ட்ரீசியன் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 16.11.2015 தேதியின்படி 27க்குள் இருகக் வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.11,500 - 26,000

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.200. எஸ்சி, எஸ்டி, பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, துறைவாரியான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.powergrideindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.11.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://eapplicationonline.com/PGCILkolkata2015/View/Advt_ER-II.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.