/

10, +2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய மேற்கு ரயில்வேயில் பணி

இந்திய ரயில்வேயின் மேற்கு ரயில்வேயில் (western Railway ) நிரப்பப்பட உள்ள குரூப் சி, டி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள்

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:05 am

ஆர். வெங்கடேசன்

இந்திய ரயில்வேயின் மேற்கு ரயில்வேயில் (western Railway ) நிரப்பப்பட உள்ள குரூப் சி, டி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 14

பணி இடம்: மும்பை

பணி - காலியிடங்கள் விவரம்:

1. Group C - 02

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900

2. Erstwhile Group D - 12

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800

தகுதி: 10, +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: Group C 18 - 29க்குள்ளும், Erstwhile Group D பணிகளுக்கு 18 - 32க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பு 01.01.2016 தேதியின்படி கணக்கிடப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினர்கள் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.wr.indianrailways.gov.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் பெற்று அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Senior Personal Officer (R&T),

Western Railway, HQ Office 3rd Floor,

Old Building Churchgate, Mumbai - 400020.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 16.11.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.wr.indianrailways.gov.in  என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.