/

டி.ஆர்.டி.ஓ-வில் ஆராய்ச்சியாளர் பணி

இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில்

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:05 am

ஆர். வெங்கடேசன்

இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டி.ஆர்.டி.ஓ.) நிரப்பப்பட உள்ள ஆராய்ச்சியாளர் பணியிடங்களுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 13

பணி - காலியிடங்கள் விவரம்:

I. Junior Research Fellow - 11

1. Agricultural Science - 04

2. Botany - 01

3. Biochemistry - 01

4. Biotechnology - 03

5. Pharmacology - 02

II.  Research Associate - 02

1. Chemistry - 01

2.  Plant Pathology - 01

தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் முதுகலை பட்டம் அல்லது பி.இ., பி.டெக் அல்லது எம்.இ, எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

உதவித்தொகை: JRF பணிக்கு மாதம் ரூ.25,000, RA பணிக்கு மாதம் ரூ.40,000

வயதுவரம்பு: JRF பணிக்கு 28க்குள்ளும், RA பணிக்கு 35க்குள்ளும் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.10.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிப்பவர்கள் தங்களின் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் கூடிய ,முழுமையான சுய-விவரங்களை தட்டச்சு செய்து The Director, Defence Institute of Bio Energy Research, Goraparao, P.O. Arjunpur, Haldwani – 263139 என்ற முகவரிக்கு விளம்பரம் செய்யப்பட்ட 21 நாள்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய www.drdo.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.