வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு
/

தட்டச்சு பயின்றவர்களுக்கு விமானப்படையில் கிளார்க் பணி

இந்தியன் விமானப்படையின் கொல்கத்தாவிலுள்ள கிழக்கு கமாண்ட் தலைமை அலுவலகத்திலும், அசாம், மேகாலயா மற்றும் மேற்கு வங்கத்திலுள்ள

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:40 am

ஆர். வெங்கடேசன்

இந்தியன் விமானப்படையின் கொல்கத்தாவிலுள்ள கிழக்கு கமாண்ட் தலைமை அலுவலகத்திலும், அசாம், மேகாலயா மற்றும் மேற்கு வங்கத்திலுள்ள யூனிட் அலுவலகங்களிலும் காலியாக உள்ள குருப் ‘சி’ பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: சிஎல்கே இந்தி தட்டச்சர்

காலியிடங்கள்: 02

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் இந்தி தட்டச்சில் கம்ப்யூட்டரில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: ஸ்டோர் கீப்பர்

காலியிடங்கள்: 01

தகுதி: ஏதேனும் ஒரு பட்டப் படிப்புடன் ஸ்டோர் கீப்பிங் பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: டிராப்ட்ஸ் மென்

காலியிடங்கள்: 01

தகுதி: மெட்ரிகுலேசன் தேர்ச்சியுடன் மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் 2 ஆண்டு டிப்ளமோ அல்லது ஐடிஐயில் டிராப்ட்ஸ் மேன்ஷிப் மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்..

பணி: சமையலர் மற்றும் உணவு விடுதி ஊழியர்

காலியிடங்கள்: 08

தகுதி: மெட்ரிகுலேசன் தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட துறையில் 6 மாதங்கள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: கார்பென்டர்

காலியிடங்கள்: 01

தகுதி: மெட்ரிகுலேசன் தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பணி: பெயின்டர்

காலியிடங்கள்: 02

தகுதி: மெட்ரிகுலேசன் தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பணி: சவேவாலா

காலியிடங்கள்: 10

தகுதி: மெட்ரிகுலேசன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: உணவு விடுதி ஊழியர்

காலியிடங்கள்: 06

தகுதி: மெட்ரிகுலேசன் மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 6 மாதங்கள் முன் அனுபவம்.

பணி: போர்த்தளவாட ஊழியர்

காலியிடங்கள்: 05

தகுதி: மெட்ரிகுலேசன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: சலவையாளர்

காலியிடங்கள்: 02

தகுதி: மெட்ரிகுலேசன் மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: வல்கனைசர்

காலியிடங்கள்: 01

தகுதி: மெட்ரிகுலேசன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: இந்தி தட்டச்சர், பெயின்டர், கார்பென்டர், சமையலர் பணிகளுக்கு மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.

ஸ்டோர் கீப்பர் பணிக்கு மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400. இதர பணிகளுக்கு மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800.

வயது வரம்பு: இந்தி தட்டச்சு பணிக்கு 18 - 27க்குள்ளும், மற்ற பணிகளுக்கு 18 - 25க்குள். எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் விமானப் படையின் கிழக்கு கமாண்ட் தலைமை அலுவலகமான கொல்கத்தாவிற்கோ அல்லது மேற்கு வங்கம், மேகாலயா, அசாம் ஆகிய மாநிலங்களில் உள்ள எந்த யூனிட் அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க விரும்புகிறார்களோ அந்த அலுவலகங்களுக்கு விண்ணப்பத்தை அனுப்பவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2015.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.indianairforce.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.