எஸ்பிஐ வங்கியில் 185 மேலாளர் பணிகள்: விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள 185 துணை மேலாளர், உதவி மோலாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து


பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள 185 துணை மேலாளர், உதவி மோலாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: CRPD?SCO/2015-16/7
பணி: Deputy Manager (Law) (post Code:DMLA)
காலியிடங்கள்: 40
சம்பளம்: மாதம் ரூ.31,705 - 45,950
வயதுவரம்பு: 21 - 38க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டத்துடன் சட்டத்துறைௌயில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த சட்டப்படிப்பை முடித்து இந்திய பார்கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். பொதுத்துறைவங்கிகளில் 2 ஆண்டு வழக்கறிஞர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Manager (System) (Post Code: AMSY)
காலியிடங்கள்: 145
சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Computer Science, Computer Application, IT, Electronics, Electronics & Telecommunication, Electronics & Instrumentation போன்ற ஏதாவதொரு துறையில் பி.இ, பி.டெக் அல்லது எம்சிஏ, எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30.11.2015 தேதியின்படி கணக்கிடப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 17.01.2015
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100.
விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 12.12.2015
விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.12.2015
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...