சிவில் பொறியாளர்களுக்கு ரைட்ஸ் நிறுவனத்தில் பணி
இந்திய ரயில்வே அமைச்சகத்தின் மினி ரத்னா நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 56 பொறியாளர்கள் (சிவில்) பணியிடங்களுக்கு


இந்திய ரயில்வே அமைச்சகத்தின் மினி ரத்னா நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 56 பொறியாளர்கள் (சிவில்) பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Engineers (Civil)
காலியிடங்கள்: 56
வயதுவரம்பு: 01.12.2015 தேதியின்படி 55க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது முதல் வகுப்பில் சிவில் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்று அதே துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.rites.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தப்பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்று செய்து சாதாரண அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Assistant Manager (P)/Rectt., RITES Ltd., RITES Bhawan, Plot No.1, Sector-29, Gurgaon – 122001, Haryana.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதிக்கு 20 சதவீதம், அனுபவத்திற்கு 20 சதவீகிதம், நேர்முகத் தேர்விற்கு 60 சதவீகிதம் என்ற அடிப்படையில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:
RITES Ltd., RITES Bhawan Plot No. 1, Sector 29 Gurgaon - 122001, Haryana.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.12.2015
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 22.12.2015
மேலும் விவரங்கள் அறிய www.rites.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...