வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு
/

வங்கி அதிகாரிப் பணிக்கான ஐபிபீஎஸ் தேர்வு அறிவிப்பு

இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்பட 22க்கும் மேற்பட்ட தேசிய வங்கிகளில் ஏற்பட்டுள்ள சிறப்பு அதிகாரிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை BPS எனப்படும்

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:38 am

ஆர். வெங்கடேசன்

இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்பட 22க்கும் மேற்பட்ட தேசிய வங்கிகளில் ஏற்பட்டுள்ள சிறப்பு அதிகாரிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை BPS எனப்படும் இந்தியன் பேங்கிங் பெர்சானல் செலக்சன் தேர்வு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பம் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிக்கோடு :01

பணி: I.T.Officer

வயதுவரம்பு: 01.11.2015 தேதியின்படி 20 - 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்டு டெலிகம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்டு இன்ஸ்ட்ரூமெண்டேஷன் ஆகிய ஏதாவதொரு பிரிவில் நான்கு வருட பொறியியல் பட்டப் படிப்பையோ அல்லது இதே பிரிவுகளில் முதுகலை பட்டம் அல்லது பட்டப்படிப்புடன் டி.ஓ.இ.ஏ.சி.சி., யின் 'பி' அளவிலான தகுதியோ பெற்றிருக்க வேண்டும்.

பணிக்கோடு: 02

பணி: Agricultural Field Officer

வயதுவரம்பு: 01.11.2015 தேதியின்படி  20 - 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: அக்ரிகல்சர், ஹார்டிகல்சர், அனிமல் ஹஸ்பென்டரி, வெர்டினரி சயின்ஸ், டய்ரி சயின்ஸ், அக்ரி இன்ஜினியரிங், அக்ரி மார்கெடிங், அக்ரோ பாரஸ்ட்ரி போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணிக்கோடு: 03

பணி: Rajbhasha Adhikari

வயதுவரம்பு: 01.11.2015 தேதயின்படி 20 - 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஹிந்தியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணிக்கோடு: 04

பணி: Law Officer

வயதுவரம்பு: 01.11.2015 தேதயின்படி 20 - 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: சட்டத்துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வழக்கறிஞர் மற்றும் Bar Council இல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணிக்கோடு: 05

பணி: HR/Personnel Officer

வயதுவரம்பு: 01.11.2015 தேதியின்படி 20 - 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். Personnel Management/ Industrial Relations/HR/HRD/Social Work/Labour Law போன்ற பிரிவில் முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணிக்கோடு: 06

பணி: Marketing Officer

வயதுவரம்பு: 01.11.2015 தேதியின்படி 20 - 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மற்றும் எம்எ்எஸ், எம்பிஏ(சந்தையியல்) 2 வருட படிப்புடன் PGDBA/PGDBM அத்துடன் சந்தையியல் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: IBPS நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்விற்கான அழைப்பு கடிதத்தை 19.01.2016 தேதிக்குப் பின் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. SC,ST,PWD பிரிவினருக்கு ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் 10.12.2015 தேதிக்குள் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ibps.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.12.2015

ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: 30.01.2016 & 31.01.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ibps.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.