/

ரைட்ஸ் நிறுவனத்தில் பணி

மத்தியில் அரசின்கீழ் செயல்பட்டு வரும் RITES நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:38 am

ஆர். வெங்கடேசன்

மத்தியில் அரசின்கீழ் செயல்பட்டு வரும் RITES நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள் எண்.88/15

காலியிடங்கள்: Junior Manager (Finance)

காலியிடங்கள்: 06

சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500

வயதுவரம்பு: 01.11.2015 தேதயின்படி 32க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஐஐஎம்-ல் சிஏ, சிஎம்ஏ, எம்பிஏ(நிதியியல்) துறைகளில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அடிப்படை கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.

காலியிடங்கள் எண்.89/15

பணி: Personal Assistant/Stenographer

காலியிடங்கள்: 05

சம்பளம்: மாதம் ரூ.9,200 - 22,400

வயதுவரம்பு: 01.11.2015 தேதயின்படி 29க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மற்றும் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் வீதம் சுருக்கெழுத்தில் எழுதும் திறனும் பெற்றிருக்க வேண்டும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

காலியிடங்கள் எண்.90/15

பணி: Junior Assistant (HR)

காலியிடங்கள்: 11

சம்பள்: மாதம் ரூ.7,300 - 17,800

வயதுவரம்பு: 01.11.2015 தேதயின்படி 29க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மற்றும் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் வீதம் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதி, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வு ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: http://wwwrites.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தப் பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து உரிய இடத்தில் புகைப்படம் மற்றும் கையொப்பம் இட்டு, அட்டெஸ்ட் செய்த தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Assistant Manager (P)/Rectt., RITES Limited, RITES Bhaawan, Plot No.1, Sector - 20, Gurgaon - 122 001, Haryana.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.11.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://wwwrites.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.