தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

நேஷனல் பெர்டிலைசர் லிமிடெட் நிறுவனத்தில் பொறியாளர், கணக்குத்துறை அதிகாரி பணி

மத்திய அரசின் மினி ரத்னா அந்தஸ்து பெற்ற நிறுவனமான நேஷனல் பெர்டிலைசர் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 159 பொறியாளர் மற்றும் கணக்குத் துறை அதிகாரி பணியிடங்களுக்கான

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:48 am

ஆர். வெங்கடேசன்

மத்திய அரசின் மினி ரத்னா அந்தஸ்து பெற்ற நிறுவனமான நேஷனல் பெர்டிலைசர் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 159 பொறியாளர் மற்றும் கணக்குத் துறை அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: பொறியாளர்

காலியிடங்கள்: 149

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

கெமிக்கல் - 72

மெக்கானிக்கல் - 42

எலக்ட்ரிக்கல் - 25

தகுதி: பொறியியல் துறையில் கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இண்ஸ்ட்ரூமெண்டேசன் பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்: சம்மந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: கணக்கு துறை அதிகாரி

காலியிடங்கள்: 10

தகுதி: சார்டர்டு அக்கவுண்ட், காஸ்ட் அண்ட் மேனேஜ்மென்ட் அக்கவுண்ட், எம்.எப்.ஏ. நிதியில் மேலாண்மை துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்: சம்மந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.12.2015 ஆம் தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.12.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://nationalfertilizers.com/images/pdf/career/noida/advt07.12.2015.pdf  என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.