மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 2 ஆம் இடத்துக்குத் தள்ளப்படும் என கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த ஏப். 23 மற்றும் இன்று (ஏப். 29) ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றுள்ளன.
இதில், கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் முதல்வராகப் பதவி வகித்து வரும் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
இந்த நிலையில், மேற்கு வங்கத்தின் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பின் முடிவுகள் புதன்கிழமை மாலை வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பெரும்பாலான நிறுவனங்களின் கருத்துக் கணிப்பில் மேற்கு வங்கத்தில் பாஜக தலைமையில் ஆட்சி அமையும் எனவும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேட்ரிஸ் நிறுவனத்தின் கருத்துக் கணிப்பின்படி, மேற்கு வங்கத்தில் பாஜக 146 - 161 இடங்களையும், திரிணமூல் காங்கிரஸ் 125 - 140 இடங்களையும் கைப்பற்றும் எனவும், ஜேவிசி டைம்ஸ் நவ் கணிப்பின்படி பாஜக 138 - 159 இடங்களையும், திரிணமூல் காங்கிரஸ் 131 - 152 இடங்களையும் கைப்பற்றும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுவை சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
exit polls indicate that the ruling Trinamool Congress party is being pushed to second place in West Bengal.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருத்துக் கணிப்புகள் பாஜகவால் நடத்தப்படுகிறது! திரிணமூல் 226 தொகுதிகளில் வெல்லும் - மமதா
என் மீது மட்டும் பல்வேறு வழக்குகள்; ஆனால், மமதா மீது இல்லை! ஏன்? பாஜகவுக்கு ராகுல் கேள்வி

பாஜக ஆட்சி அமைப்பதை யாரும் விரும்பவில்லை: மேதினிப்பூரில் மமதா!
மக்களவை 37.9%, மாநிலங்களவை 46% திரிணமூல் பெண் உறுப்பினர்கள்: மமதா
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


