பனையூரில் விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு!வரும் தேர்தல்களிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ் மக்களவைத் தேர்தலிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ் காங்கிரஸ் பேரவைக் குழுத் தலைவர் ராஜேஷ் குமார்! தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு! திமுகவுடனான கூட்டணி முறிவு!
/

தவெக தலைவர் விஜய்க்கு குவியும் வாழ்த்துகள்!

தவெக 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது...

News image

தவெக தலைவர் விஜய் - கோப்புப் படம்

Updated On :4 மே 2026, 2:06 pm IST

சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னிலை பெற்றுள்ளதால் தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முடிவுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 110 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

தவெக தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளிலும் அதிக வாக்குகளுடன் முன்னிலையில் இருப்பதால் இரண்டு தொகுதிகளிலும் வெல்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்தியளவிலுள்ள பல பிரபலங்கள் விஜய்க்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ஆந்திரத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தன் பதிவில், “என் அன்பான சகோதரர் விஜய்க்கு மனமார்ந்த பாராட்டு! முதல் தேர்தலிலேயே மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது உண்மையிலேயே ஆச்சரியப்படுத்துகிறது. இந்த புதிய பயணத்தைத் தொடங்கும் உங்களுக்கு பெரும் வலிமையும் வெற்றியும் கிடைக்க வாழ்த்துகள். கடவுள் எப்போதும் உங்களுடன் இருப்பாராக” எனக் கூறியுள்ளார்.

முக்கியமாக நடிகர் நானி, “முதலில் சந்தேகிக்கப்பட்டார். பின் வெற்றி பெற்றார். முதலில் எங்கள் வீட்டில் நடந்தது தற்போது பக்கத்து வீட்டிலும் நடந்துள்ளது. கீழே இருப்பவர்கள் வெல்வது அபாரமான சினிமா மாதிரிதான். (நான் அபாரமான அரசியல் எனச் சொல்ல வேண்டுமா?) தங்கள் முடிவில் தெளிவாக இருந்த தமிழக மக்களுக்கு பெரிய விஷயங்கள் நடக்கும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகரான டைகர் ஷெராஃப், “மக்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைப் பார்க்க வியப்பாக இருக்கிறது. உங்களின் அடுத்தக்கட்ட பயணத்திற்கு அதிக பலம் கிடைக்கட்டும். ” எனக் கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், “விஜய் அண்ணா, இது மிகப்பெரியது. இதற்கு முன்பும் இதற்குப் பின்பும் இல்லாத வரலாற்று வெற்றி” எனப் பதிவிட்டுள்ளார்.

Congratulations are pouring in for Tvk leader Vijay as he takes the lead in the assembly elections.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.