மறைந்த முதல்வர் கருணாநிதி முதன்முதலாக தேர்தல் களம் கண்ட தொகுதி குளித்தலை. 1957 தேர்தலில் இங்கு போட்டியிட்டு முதல் வெற்றியைப் பதிவு செய்தார். இந்த ராசியானது அவரை இறுதி வரை தேர்தல்களில் வெற்றி பெறச் செய்தது. இத்தகைய சிறப்பு மிக்க இந்தத் தொகுதியில் வரும் தேர்தலில் வெற்றி வாகை சூடப்போவது யார் என்பதே எதிர்பார்ப்பு.
தொகுதி அறிமுகம்: மேற்கில் இருந்து கிழக்காக ஓடி வரும் காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்து 'காகம் பறவா மலை' என்றழைக்கப்படும் அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயில், குளித்தலை கடம்பவனேசுவரர் கோயில், ராட்சாண்டார் திருக்கோயில் என ஏராளமான சிவத்தலங்களை கொண்டதாக இத்தொகுதியுள்ளது.

நில அமைப்பு: குளித்தலை நகராட்சி, மருதூர், நங்கவரம் பேரூராட்சிகளைக் கொண்டதாகவும், கிருஷ்ணராயபுரம் வட்டத்தின் சிந்தலவாடி, பிள்ளபாளையம், கள்ளப்பள்ளி, வயலூர், வீரியபாளையம், பஞ்சப்பட்டி, போத்துராவுத்தன்பட்டி, பாப்பக்காப்பட்டி, சிவாயம் (வடக்கு) உள்ளிட்ட பகுதிகளையும், குளித்தலை வட்டத்தில் கருவாப்பநாயக்கன்பேட்டை, வதியம், மணத்தட்டை, வைகைநல்லூர் (வடக்கு), வைகைநல்லூர் (தெற்கு), ராஜேந்திரம் (வடக்கு), ராஜேந்திரம்( தெற்கு), குமாரமங்கலம், பொய்யாமணி, சூரியனூர், முதலைப்பட்டி, சேப்ளாபட்டி, நெய்தலூர் (வடக்கு), நெய்தலூர் (தெற்கு), தளிஞ்சி, கள்ளை, இனங்கூர், நல்லூர், இரண்யமங்கலம், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளையும் கொண்டது. திருச்சி, கரூர், நாமக்கல் மாவட்ட எல்லையோரம் அமைந்துள்ளது இந்த தொகுதி.

குளித்தலை ரோப் கார்
சாதி, சமூகம், தொழில்கள்: முத்தரையர், ரெட்டியார், தாழ்த்தப்பட்டோர், சோழியவெள்ளாளர், நாயக்கர்கள், மீனவர் என அனைத்துத் தரப்பினரும் உள்ள இந்த தொகுதியில் முத்தரையர்களின் வாக்கு வங்கித்தான் வெற்றித்தோல்வியை நிர்ணயிப்பதாக உள்ளது. காவிரி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள இத்தொகுதியில் விவசாயம்தான் பிரதான தொழிலாக உள்ளது.
வாழை, நெல், கரும்பு, பூக்கள், வெற்றிலை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. சொல்லும்படியாக பெரிய தொழிற்சாலைகள் ஏதும் இல்லை. ஆர்டிமலை உள்ளிட்ட இடங்களில் கிரானைட் வெட்டி எடுக்கப்படுகிறது.
தொகுதியின் எதிர்பார்ப்பு: விவசாயத்தைத் தவிர வேறு வேலைவாய்ப்புகள் இல்லாததால் கரூர், திருச்சி ஆகிய ஊர்களுக்கு வேலைக்குச் செல்கின்றனர். காவிரியில் மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுகிறது. மணல் லாரிகளால் குளித்தலை புறவழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் அவற்றை தடுக்கும் வகையில் மேம்பாலங்கள் அமைக்க வேண்டும்.
கரூர் மாவட்ட தலைமை மருத்துவமனை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்துப்பட்டுவிட்டதால் குளித்தலை அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக உயர்த்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். குளித்தலை புதிய பேருந்து நிலையம் வேண்டும் என்பது நீண்ட நாளைய கோரிக்கை. விளை பொருள்களை பாதுாகாக்க குளிர்பதனக் கிடங்கு தேவை.
அரசியல் களம்: திமுகவில் தற்போதைய எம்எல்ஏ ஏ.ராமருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்கின்றனர் அக்கட்சியினர். அதிமுகவினரோ, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் எம்.எஸ். கண்ணதாசனுக்கோ, பாப்பாசுந்தரத்துக்கோ வாய்ப்பு கிடைக்கலாம் என்கின்றனர்.
கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்போவதில்லை என்ற நிலையில் திமுக, அதிமுக மட்டுமே நேரடி களம் காணும் தொகுதியாக உள்ளது. பாஜகவிலும் இத்தொகுதியை கேட்டு அதிமுகவை அணுகி வருகின்றனர். திமுக 6 முறையும், அதிமுக 5 முறையும் வென்றுள்ளன. காங்கிரஸ் 2 முறை, கம்யூனிஸ்ட் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

குளித்தலை கடம்பவனேசுவரர் கோயில்
தற்போதைய வாக்காளர்கள்: ஆண்- 1,10,462, பெண்-1,16,312, மூன்றாம் பாலினம்-11, மொத்தம்- 2,26,785.
இதுவரை வெற்றிபெற்றவர்கள்
1957 மு. கருணாநிதி (திமுக)
1962 வி. இராமநாதன் (காங்.)
1967 எம்.கந்தசாமி (திமுக)
1971 எம்.கந்தசாமி (திமுக)
1977 சீனிவாசரெட்டியார் (காங்.)
1980 ஆர்.கருப்பையா (இந்திய கம்யூனிஸ்ட்)
1984 முசிரிபுத்தன் (அதிமுக)
1989 ஏ.பாப்பாசுந்தரம் (அதிமுக-ஜெ. அணி)
1991 ஏ.பாப்பாசுந்தரம் (அதிமுக)
1996 ஆர்.செல்வம் (திமுக)
2001 ஏ.பாப்பாசுந்தரம் (அதிமுக)
2006 ஆர். மாணிக்கம் (திமுக)
2011 ஏ. பாப்பாசுந்தரம் (அதிமுக)
2016 ஏ. ராமர் (திமுக)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் பதவி விலகுகிறார்!

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி: சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு அண்ணாமலை கண்டனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


