திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருப்பத்தூர் தவெக வேட்பாளர் வெற்றியை எதிர்த்து பெரிய கருப்பன் வழக்கு: நாளை விசாரணை

திருப்பத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்.எல்.ஏ.வாக பதவியேற்க தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

News image

பெரிய கருப்பன்

Updated On :9 மே 2026, 10:17 pm IST

திருப்பத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்.எல்.ஏ.வாக பதவியேற்க தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில், தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி, திமுக வேட்பாளர் பெரியகருப்பனை விட ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

பெரியகருப்பன் 83,364 வாக்குகளையும், சீனிவாச சேதுபதி 83,365 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

இந்த நிலையில் திருப்பத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்.எல்.ஏ.வாக பதவியேற்க தடை விதிக்க வேண்டும் என திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை நீதிபதி எல்.விக்டோரியா கௌரி மற்றும் நீதிபதி என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய கோடை விடுமுறை கால சிறப்பு அமர்வு அவசர வழக்காக ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணிக்கு விசாரிக்கிறது.

நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் தவெக வெற்றியைத் தொடர்ந்து முதல்வராக அதன் தலைவர் விஜய் நாளை பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

DMK candidate Periya Karuppan has filed an urgent petition in the Madras High Court to stay the swearing-in of the TVK (Tamilaga Vettri Kazhagam) candidate.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.