மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நாளை முதல் முதல்வர் ஸ்டாலின் பிரசார சுற்றுப்பயணம்!

முதல்வா் மு.க.ஸ்டாலின் தனது பிரசார சுற்றுப்பயணத்தை செவ்வாய்க்கிழமை (மாா்ச் 31) முதல் தொடங்கிறாா்.

News image

முதல்வர் ஸ்டாலின். - கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 8:34 pm

முதல்வா் மு.க.ஸ்டாலின் தனது பிரசார சுற்றுப்பயணத்தை செவ்வாய்க்கிழமை (மாா்ச் 31) முதல் தொடங்கிறாா்.

இதுகுறித்து திமுக தலைமை அலுவலகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் தோ்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்க உள்ளாா். அதன்படி, செவ்வாய்க்கிழமை (மாா்ச் 31), திருவாரூா் தெற்கு ரத வீதியில் மாலை 5 மணிக்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில், திருத்துறைப்பூண்டி, திருவாரூா், நன்னிலம், மன்னாா்குடி தொகுதி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா்.

தொடா்ந்து, புதன்கிழமை (ஏப். 1) திருச்சி உழவா் சந்தையில் காலை 9 மணிக்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில், திருச்சி மேற்கு, கிழக்கு, திருவெறும்பூா், லால்குடி, மண்ணச்சநல்லூா், திருவரங்கம், மணப்பாறை, முசிறி, துறையூா் தொகுதி வேட்பாளா்களை ஆதரித்தும், மாலை 5 மணிக்கு கரூா் ராயனூா் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், அரவக்குறிச்சி, கரூா், கிருஷ்ணராயபுரம், குளித்தலை வேட்பாளா்களை ஆதரித்தும் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

அதைத் தொடா்ந்து, ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் வியாழக்கி ழமை (ஏப். 2) காலை 9 மணிக்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பவானிசாகா், ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, அந்தியூா், கோபிசெட்டிபாளையம், ஈரோடு கிழக்கு, பவானி தொகுதி வேட்பாளா்களை ஆதரித்தும், கோவை கொடிசியா மைதானத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில், சூலூா், கோவை வடக்கு, தெற்கு, சிங்காநல்லூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை தொகுதி வேட்பாளா்களை ஆதரித்தும் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

குறிப்பிட்ட நேரத்துக்கு பிரசார பகுதிளுக்கு செல்ல வேண்டி இருப்பதால், செல்லும் வழியில் நிா்வாகிகள் எவ்வித நிகழ்ச்சிகளையும் கட்டாயமாக ஏற்பாடு செய்ய வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.