தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின், தனது 6-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை ஆண்டிபட்டியில் தொடங்குகிறார்.
தமிழகம் முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தலைவர் மு.க. ஸ்டாலின், தேர்தல் பிரசாரம் மூலமாக வாக்கு சேகரித்து வருகிறார்.
இந்நிலையில் முதல்வரின் 6-ம் கட்ட தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் குறித்த விவரத்தை திமுக தலைமை வெளியிட்டுள்ளது.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், பேரவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது பிரசாரத்தை, மார்ச் 31-ஆம் தேதி திருவாரூரில் தொடங்கிய நிலையில், ஆறாம் கட்ட பிரசாரத்தை ஏப்ரல் 17-ஆம் தேதி ஆண்டிபட்டியில் தொடங்குகிறார்.
அதன்படி, ஏப். 17 மாலை 5 மணிக்கு ஆண்டிபட்டி, இரவு 7 மணிக்கு திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியிலும்
ஏப். 18 ஆம் தேதி மாலை 5 மணிக்கு திருப்பூரிலும் இரவு 7 மணிக்கு மேட்டுப்பாளையத்திலும்
ஏப். 19 ஆம் தேதி மாலை 4 மணிக்கு ஓசூரிலும் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
Summary
M.K. Stalin 6th Phase Election Campaign Tour for tamilnadu assembly election
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் - புகைப்படங்கள்

தேர்தல் தோல்வி: திமுக கள ஆய்வுக் குழுவில் இடம்பெற்றவர்கள் யார் யார்?

தேர்தல் தோல்வி: கள ஆய்வுக் குழுவுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!

வெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



