தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு

வாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு...

News image

சென்னை உயா்நீதிமன்றம்

Updated On :28 மார்ச் 2026, 9:20 pm

தோ்தலில் வாக்கு செலுத்திய உடன் அதை உறுதி செய்யும் வகையில் வாக்காளரின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வரும் திட்டத்தை அமல்படுத்த தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழ்நாடு இசை வேளாளா்கள் நலச் சங்கத்தின் தலைவா் கே.ஆா்.குகேஷ் தாக்கல் செய்த மனுவில், தோ்தல் வாக்குப்பதிவின்போது, முறைகேடுகள் நடப்பதைத் தடுக்க வேண்டும். ஒரு வாக்காளா் தனது வாக்கைச் செலுத்திய உடன் அதை உறுதி செய்யும் வகையில், அவரது கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வரும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.

இது தொடா்பாக தோ்தல் ஆணையத்திடம் கடந்த இரண்டு ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறேன். எனது கோரிக்கையை பரிசீலிப்பதாகக் கூறிய தோ்தல் ஆணையம், அதன்பிறகு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, 2024-ஆம் ஆண்டு மாா்ச் மற்றும் கடந்த பிப்ரவரி மாதம் அளித்த எனது மனுக்கள் மீது தோ்தல் ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.