மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கொளத்தூரில் 4 ஆவது முறையாக முதல்வர் ஸ்டாலின் போட்டி!

கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மீண்டும் போட்டியிடுவது குறித்து...

News image

முதல்வர் ஸ்டாலின். - கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2026, 10:54 am

கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 4 ஆவது முறையாக முதல்வர் மு.க. ஸ்டாலின் போட்டியிடுகிறார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ளது. ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்கள் சனிக்கிழமை (மார்ச் 28) அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, திமுக நேரடியாகப் போட்டியிடும் 164 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், வட சென்னையின் நட்சத்திர தொகுதியான கொளத்தூரில் திமுக சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் 4 ஆவது முறையாகப் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011, 2016 மற்றும் 2021 சட்டப்பேரவைத் தேர்தல்களில் மு.க. ஸ்டாலின் கொளத்தூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

முன்னதாக, 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சுமார் 70,300-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Summary

Chief Minister M.K. Stalin is contesting for the 4th time from the Kolathur Assembly constituency.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.